பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்து : விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங். இன்று இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமரிந்தர் சிங்.
நான்கு வாரங்களுக்குள் முறையான தகவலை சமர்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று மதியம் பஞ்சாப் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆகியோருடன் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.
முதல் ரயிலினால் தான் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கின்றன. இரண்டாவது ரயில் ஏற்கனவே இறந்தவர்களின் உடலின் மீது மேலும் பயணித்து இந்த விபத்தை மேலும் கோரமாக்கியிருக்கிறது. ரயில்வே துறையின் விளக்கம் பற்றி படிக்க
பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்து நஷ்ட ஈடு
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து உத்தரவிட்டிருக்கிறார் அமரிந்தர் சிங். அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று மாலை இஸ்ரேல் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார் அமரிந்தர் சிங்.
பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்து
நேற்று தசரா விழாவில் ராவணன் கொடும்பாவியை எரிப்பதற்காக 300க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தனர். கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்தவுடன் அதனை பார்வையிட மக்கள் ட்ராக்குகள் மீது ஏறி நின்றிருக்கின்றனர். முதல் ட்ரெயினான ஜலந்தர் அமிர்தசரஸ் மக்கள் மீது ஏறிச்சென்று பெரும் விபத்தினை உண்டாக்கியது. அந்த ட்ரெயினில் இருந்து தப்பித்தவர்கள் அம்ரிஸ்தர் - ஹௌவ்ரா ரயிலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க