நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவை தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் புறக்கணித்தார். இந்த விழாவில் ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியேற்றினார்.
தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திர சேகர் ராவ்விற்கும், ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு நடந்துவருகிறது.
இந்த நிலையில், கரோனா பெருந்தொற்று பரவலை காரணம் காட்டி குடியரசு தின விழாவை தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் ரத்து செய்தார்.
இதற்கு எதிராக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குடியரசு தின விழாவை நடத்த உத்தரவிட்டது.
-
தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்</p>
இந்த நிலையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், போதிய நேரமின்மை காரணமாக கலந்துகொள்ள இயலவில்லை என மாநில அரசு கூறிவிட்டது.
இதற்கிடையில் நேற்று ஆளுனர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் கே. சந்திர சேகர் ராவ், அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் என யாரும் கலந்துகொள்ளவில்லை. தலைமை செயலாளர், காவல் துறை தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனால் மாநில அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/