துபாயில் புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி அரங்கு; ரங்கசாமி தொடங்கிவைத்தார்

அரேபியன் பயணச்சந்தையில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி அரங்கை முதல்வர் ரங்கசாமி இணையம் வாயிலாக தொடங்கி வைத்தார்.

அரேபியன் பயணச்சந்தையில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி அரங்கை முதல்வர் ரங்கசாமி இணையம் வாயிலாக தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
Puducherry

புதுச்சேரி வேலை வாய்ப்பு

ஆண்டுதோறும் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த சர்வதேச சுற்றுலா பயணக்கண்காட்சியாக அரேபிய பயணச்சந்தை (Arabian Travel Mart ) விளங்குகிறது.
இதில் கண்காட்சி அரங்குகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடங்களை உள்ளடக்கிய தளமாக துபாய் உலக வர்த்தக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் விமானப்போக்குவரத்து நிறுவனங்கள், சுற்றுலா பயண அமைப்பாளர்கள், ஓட்டல்கள் மற்றும் கடற்கரை குடில்கள். கடற்பயண அமைப்பாளர்கள், சுற்றுலா தள மேம்பாட்டாளர்கள், சுற்றுலா தொழில் சேவைகளை உள்ளடக்கிய அமைப்புகள் அவற்றை சந்தைப்படுத்துவதற்காக அரேபியன் பயணச்சந்தையில் பங்கேற்கிறார்கள். நிலையான சுற்றுலா வளர்ச்சி, மருத்துவச்சுற்றுலா மற்றும் சுற்றுலா பயணத்தொழிலில் உள்ள புதிய பரிமாணங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதே இப்பயணச்சந்தையின் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், செயலர் ஜவகர், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய கடற்கரைத்திட்டங்கள், மாநாட்டு கூடங்கள், கலாச்சார வளாகங்கள், ஆன்மீக சுற்றுலா தளங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தயாரிப்புகள் போன்றவற்றை அறிமுகம் செய்வதற்காகவும் சுற்றுலா தொழிலில் பெருகியுள்ள பல்வேறு வாய்ப்புகளை விளக்கி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயண அமைப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பெருந்திட்ட ஆலோசகர்களிடம் ஈந்திப்பு நிகழ்த்துவதற்காகவும் இப்பயணச்சந்தை நல்வாய்ப்பாக அமையும்.

மே-மாதம் 1-ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் இப்பயணச்சந்தை நடைபெறுகிறது. மே-மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்படும் அரேபியன் பயணச்சந்தையில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி அரங்கினை முதல்வர் ரங்கசாமி இணையம் வாயிலாக தொடக்கி வைத்தார்.

Advertisment
Advertisements

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: