கேரளா வெள்ள நிவாரண நிதி (CMDRF) : மழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர் கேரள மக்கள். கேரளாவின் ஏனைய பகுதிகள் முற்றிலும் மழை வெள்ளத்தால் மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், பயிர்கள் என அனைத்தும் முற்றிலும் சேதாரமாகி உள்ளன.
மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது அம்மாநில அரசு. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
71 கோடி ரூபாய் மதிப்பில் நிதி உதவி அளித்த நீத்தா அம்பானி
கேரளா வெள்ள நிவாரண நிதி ரூபாய் 1000 கோடி :
இதுவரை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியின் ( Kerala Chief Minister’s Distress Relief Fund (CMDRF)) கீழ் சுமார் 1000 கோடி ரூபாய் நிதி வந்து சேர்ந்துள்ளது என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
The contributions to Chief Ministers Distress Relief Fund crossed ₹1000 crores today.We are indeed overwhelmed at this global solidarity towards Kerala. Reviewing the pledges and promises I feel we shall cross ₹2000 crores. This is going to be an all time record in the country
— Thomas Isaac (@drthomasisaac) 30 August 2018
மேலும், உலங்கெங்கிலும் இருக்கும் மக்களின் பேரன்பினால் தான் இது சாத்தியமானது என்று தெரித்துள்ள அவர் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். வெள்ள நிவாரண நிதி நிச்சயமாக ரூபாய் 2000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறிய அவர், 2000 கோடி நிதி திரட்டப்பட்டால் அது தேசிய அளவிலான சாதனையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.