புதுச்சேரி மாநிலத்தில் ஜன.1ஆம் தேதிக்குள் அனைத்து அரசு துறைகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயப்படுத்த தலைமை செயலர் ராஜிவ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள 54 துறைகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் காலை 8.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி புரிய வேண்டும்.
இதில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை உணவு நேரம் என்பது விதி.ஆனால், பல துறைகளில் சரியான நேரத்திற்கு ஊழியர்கள் பணியில் இருப்பதில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் நிர்வாக சீர்திருத்ததுறை, அரசு ஊழியர்களின் வருகையை கண்காணிக்க தனிப்படை அமைத்தது. ஆனால், பலனில்லை.
அதனால், வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் அனைத்து அரசு துறைகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயப்படுத்த தலைமை செயலர் ராஜிவ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. பயோமெட்ரிக் அமல்படுத்திய பின், நிர்வாக சீர்திருத்த துறை அதிகாரிகளை மீண்டும் களம் இறக்கி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“