5 மாதங்களில் 25 ஆயிரம் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் : இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Child pornography cases in India : 2020 ஜனவரி 23ம் தேதி காலவரையிலான கடந்த 5 மாதங்களில், இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபாச பட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

child pornography, child pornography cases in india, us report on pornography, child porn uploaded in indian sites, india news, indian express
child pornography, child pornography cases in india, us report on pornography, child porn uploaded in indian sites, india news, indian express

Mohamed Thaver

2020 ஜனவரி 23ம் தேதி காலவரையிலான கடந்த 5 மாதங்களில், இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபாச பட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டில்லி முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB), அமெரிக்காவின் National Center for Missing and Exploited Children (NCMEC) உடன் இணைந்து குழந்தைகள் ஆபாச வீடியோ குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

NCMEC அமைப்பு, அமெரிக்காவில் 1984ம் ஆண்டில் துவக்கப்பட்ட தனியார் தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்பு, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகள் மரணத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

NCMEC மற்றும் NCRB அறிக்கையில் தெரிவித்துள்ள புள்ளிவிபரங்கள் குறித்து மகாராஷ்டிரா அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. தங்கள் மாநில சைபர் யூனிட் அளித்துள்ள தகவல்களின்படி 1700 குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவேற்றம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மகாராஷ்டிரா அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஆபரேசன் பிளாக்பேஸ் என்ற பெயரில் நாங்கள் குழந்தைகள் ஆபாச வீடியோ தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறியதாவது, NCMEC அமைப்பு தந்துள்ள இந்த புள்ளி விபரங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பியுள்ளோம். அவர்களிடம் இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவேற்றலில், டில்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை, முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மகாராஷ்டிராவில் இதுவரை 7 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் வழக்கு பதிந்து பலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில், மும்பை, தானே, புனே உள்ளிட்ட இடங்களிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், அதிலும் மும்பையில் மட்டும் இதுதொடர்பாக 500 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இணையதள நிறுவனங்களிடம் இதுதொடர்பாக பேசி, அவர்களிடமிருந்து விபரங்களை பெற்று வருகிறோம் என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிரா மட்டுமல்லாது, டில்லி, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Child pornography cases in india us report on pornography

Next Story
‘சிஏஏ வாபாஸ் லோ’: அமித் ஷா பேரணியில் எதிர் கோஷமிட்ட இளைஞர்harjit singh, CAA protest,ஹர்ஜித் சிங்,anti caa slogan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X