இன்று (ஜூலை 30) "ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம்" கொண்டப்படுகிறது. இதனை குறிக்கும் வகையில் கேம்ஸ் 24x7 மற்றும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை (கே.எஸ்.சி.எஃப் - KSCF) ஒரு ஆய்வு அறிக்கையை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. "இந்தியாவில் குழந்தை கடத்தல்: சூழ்நிலை தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தலையீட்டு உத்திகளின் தேவை" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தைகள் கடத்தலின் மிக முக்கியமான இடமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:-
2016 முதல் 2022 வரை கே.எஸ்.சி.எஃப் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 13,549 ஆக இருந்தது. கடத்தப்பட்ட குழந்தைகளுக்கான முக்கிய இடங்களில் ஒன்றாக ஜெய்ப்பூர் திகழ்கிறது. அதிகபட்சமாக 1,115 குழந்தைகள் இந்த மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்தமாக மீட்கப்பட்ட குழந்தைகளில் 9 சதவீதம் ஆகும். இருப்பினும், ராஜஸ்தான் மாநிலத்தை 'குழந்தை தொழிலாளர் இல்லாத' மாநிலமாக மாற்றுவதற்கு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அடுத்தாக தலைநகர் வடக்கு டெல்லியில் இருந்து 5.24 சதவீதமும், வடமேற்கு டெல்லியில் இருந்து 5.13 சதவீதமும் மீட்கப்பட்ட குழந்தைகள் உள்ளனர். டெல்லியின் 5 மாவட்டங்களும் முதல் 10 மாவட்டங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ராஜஸ்தானில் சராசரியாக கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளில் (2016-20) 48 ஆக இருந்த எண்ணிக்கை, கொரோனாவுக்குப் பிந்தைய ஆண்டுகளில் (2021-22) 99 ஆக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக, கொரோனா தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 'குறிப்பிடத்தக்க அதிகரிப்பு' ஏற்பட்டுள்ளது. இது 'நாட்டின் கடத்தல் சூழ்நிலையில் கொரோனா ஏற்படுத்திய தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை' உறுதிப்படுத்துகிறது.
மாநிலங்களில் முன்னணியில் உள்ள உத்தரப் பிரதேசம், ஆண்டுக்கு சராசரியாக அதிகபட்சமாக கடத்தப்படும் குழந்தைகளைக் கண்டுள்ளது - கொரோனாவுக்கு முந்தைய கட்டத்தில் (2016-19) 267 மற்றும் கொரோனாவுக்குப் பிந்தைய கட்டத்தில் (2021-22) 1,214 அல்லது 350 க்கும் அதிகமான அதிகரிப்பு உள்ளது. 2021 ஆம் ஆண்டில் 2,055 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் சேர்ந்து முதல் மூன்று மாநிலங்களில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக அதிகபட்ச குழந்தைகள் கடத்தப்படும் மாநிலங்களாகும்.
கர்நாடகாவில் ஆண்டுக்கு சராசரியாக கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பைக் காட்டிகிறது. கொரோனாவுக்கு முன் 6 வழக்குகளில் இருந்து அதற்குப் பிறகு 110 ஆக, அதாவது 18 மடங்கு அதிகரித்துள்ளது. சுவாரஸ்யமாக, கொரோனாவுக்குப் பிறகு கேரளாவில் ஒரு குழந்தை கூட கடத்தப்பட்டு மீட்கப்படவில்லை.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil