2019 அக்டோபரில் வெளியான குழந்தைப் புத்தகங்கள்

Children’s books released in October 2019 : உங்கள் குழந்தைகளுக்கு எந்தெந்த புத்தகங்களைத்தான் வாங்குவது என திகைப்படைகிறீர்களா?

By: Published: November 10, 2019, 3:00:26 PM

உங்கள் குழந்தைகளுக்கு எந்தெந்த புத்தகங்களைத்தான் வாங்குவது என திகைப்படைகிறீர்களா? கடந்த மாதத்தில் இந்தியப் பதிப்பாளர்கள் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியல், இதோ!

Asterix and the Chieftain’s Daughter (ஆஸ்டெரிக்சும் சீஃப்டெனின் மகளும்)

ஆஸ்டெரிக்ஸ் சாகசங்கள் காமிக்ஸ் வரிசையில், அண்மைய வரவு, இது. கௌல் கிராமத்துக்கு மர்மமான ஒரு இளம்பெண் வருகிறாள். அவள் வேறு யாருமல்ல, ரோமானியர்களால் சண்டையில் தோற்கடிக்கப்பட்ட, துணிவுக்குப் பெயர்போன, அவேனி பழங்குடியினத்தின் தளபதி (சீஃப்டென்) வெர்சிங்கடோரிக்சின் மகளே! அவளைக் கைப்பற்ற சீசர் விரும்பியநிலையில், ஆஸ்டெரிக்ஸ் மற்றும் ஒபெலிக்ஸ் இருவரின் பராமரிப்பில் விடப்படுகிறாள் என்று போகிறது கதை. இந்நூலை, ஹாச்செட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஒரு விருப்பமரத்திலிருந்து மகள் : புராணப் பெண்களைப் பற்றிய மாறுபட்ட கதைகள்- சுதா மூர்த்தி ( 9+ வயதினருக்கு )
The Daughter from a Wishing Tree: Unusual Tales About Women in Mythology by Sudha Murty

சக்தி முதல் பாமதிவரை, கடவுளர்கள் உள்பட கவர்ந்திழுக்கும் புராணப் பெண்கள் இந்த உலகத்துக்கு எப்படியெல்லாம் உதவிசெய்கிறார்கள் என கதை சொல்கிறது, இந்தப் புத்தகம். புஃபின் வெளியீடு.

பசியுடன் இருப்பது யார்?- காஓய் டாக்காஃகாசி (3+ வயதினர்க்கு)Who’s Hungry? by Kaori Takahashi

சிறுகுழந்தைகளுக்காக ஜப்பானிய எழுத்தாளரும் சித்திரக்கலைஞருமான டாக்காஃகாசியின் அருமையான புத்தகம், இது. அவருடைய பீக் வரிசை புத்தகங்களில் இதுவும் ஒன்று. மரம், பிறந்தநாள் திகைப்பு ஆகிய கதைகளும் இடம்பெற்றுள்ளன. தாரா புக்சின் வெளியீடு.

ரின்சின்னின் குலார் மலர்(6+வயதினர்க்கு) Gular Flower by Rinchin
குலார் மலரின் ரகசியத்தைக் கண்டுபிடிப்பது குறித்த புத்தகம், இது. கடைசியாக வெளியான தந்திரப்பறவையின் தொடர்ச்சியாக வந்துள்ளது. காடுகளிலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட பார்தி பழங்குடியினரின் உலகத்தில் நம்மை மூழ்கடிக்கிறது. துளிகாவின் வெளியீடு.

லீலாவுக்கு பல் போனது – மம்தா நைனி( 3+) Lila’s Loose Tooth by Mamta Nainy
லீலாவின் வகுப்புத்தோழர்கள் வரிசையாக பற்களை இழக்கத் தொடங்குகிறார்கள். அதைப் பற்றிய நிறைய கதைகள். லீலாவின் பற்களுக்கு என்ன நேர்ந்தது என இக்கதை விவரிக்கிறது. துளிகாவின் வெளியீடு!

காயாவின் பயணம்- மிலா காலன் (6+) Kaya’s Journey by Mila Kahlon
நூறு வயது ஆன கொய் மீன் தன்னைப் பற்றி பெரிதாக நினைத்துக்கொள்கிறது. பல நாடுகள், பண்பாடுகளில் பெரிய ஜாம்பாவனாக ஆகவேண்டும் என சிறிய குளத்திலிருந்து தன் பயணத்தை மேற்கொள்வதை விவரிக்கிறது, இந்தக் கதைப்புத்தகம். ஹார்பர்காலின்ஸ் குழந்தைகள் புத்தக வெளியீடு.

மினியின் பணம்- நந்தினி நாயர்(5+)Mini’s Money by Nandini Nair
தசரா விழாவில் பணப்பரிசு கிடைத்த ஒரு ஐந்து வயது சிறுமி மினியைப் பற்றி விவரிக்கும் கதைத்தொடரின் முதல் பகுதி, இது. அந்தப் பணத்தை எங்கே செலவழிப்பது என்பதை குழந்தை மினி எப்படி கண்டறிகிறாள் என்பதுதான் இந்தக் கதை. இதுவும், ஹார்பர்காலின்ஸ் குழந்தைகள் புத்தக வெளியீடு.

கீதையும் நீயும் – சேஃலா திர் (9+) The Gita and You by Sheila Dhir குருச்சேத்திரப் போரில் கிருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட எட்டு கதைகள், எளிமையான நடையில் உள்ளன. கீதையின் உபதேசங்களை நன்கு உணர்த்தும்படியாக, கதைகளுக்கிடையில் தூவிவிட்டதைப் போல இந்தப் புத்தகம் விளங்குகிறது. ஹார்பர்காலின்ஸ் குழந்தைகள் புத்தக வெளியீடு.

மகாபாரதக் கதைகள் – தீபா அகர்வால் (9+)Mahabharata Stories by Deepa Agarwal
மகாபாரதத்திலிருந்து குறிப்பிட்ட வயதினருக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்ட புத்தகம். மகாபாரதம் எப்படி எழுதப்பட்டது என்பது முதல், மிருதசஞ்சீவனி கதை, தேவப்பிரதாவின் பிறப்பு, மெழுகு அரண்மனை, திரௌபதியின் சுயம்வரம் மற்றும் பிற கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஹார்பர்காலின்ஸ் குழந்தைகள் புத்தக வெளியீடு.

பட்ஜி, பிரிட்ஜ், பிக் டிஜின் – இரஞ்சித் லால் (12+) Budgie, Bridge and Big Djinn by Ranjit Lal
விடலைப் பருவத்தில் உள்ள பட்ஜி, பிரிட்ஜ் ஆகியோரும் பிக் டிஜின் எனும் நாயும், மலைப்பகுதியில் அமைந்துள்ள அவர்களின் அற்புதமான வீட்டுக்கு ஆபத்தை உண்டாக்கும் – அச்சமூட்டும் சூழலை எதிர்கொண்டது எப்படி என விறுவிறுப்பாகப் போகிறது, இந்தப் புத்தகம். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயத்தையும் கதையினூடாக இந்தப்புத்தகம் எடுத்துக்கூறுகிறது. ஹார்பர் காலின்ஸ் குழந்தைகள் புத்தக வெளியீடு.

இந்தியாவுக்கு உள்ளே: கவர்ந்திழுக்கும் உணவு – ஃபன் ஓகே பிளீஸ் (9+)
Inside India: Fascinating Food by FunOkPlease
வகைவகையான இந்திய உணவுகள், அவற்றின் வரலாறு, செய்முறைக் குறிப்புகளுக்குள் இழுத்துச்செல்கிறது, ஃபன்ஓகேபிளீசின் இந்தச் செயல்பாட்டுப் புத்தகம். ஹார்பர்காலின்ஸ் குழந்தைகள் புத்தக வெளியீடு.

மென்சா உன் மூளையைப் பயிற்றுவி (9+) Mensa Train Your Brain
ஹார்பர் காலின்ஸ் குழந்தைகள் வெளியீடான இந்தப் புத்தகம், புதிய புதிர்ப் புத்தக வரிசையில் உள்ளது. மனதைச் சுழலவைக்கும் சவால்கள், உத்தியான தர்க்கக் கணக்குகள், மூளைக்கு வேலைதரும் விளையாட்டுகளைக் கொண்டுள்ளது.

சிறுமியின் சக்தி: விதிகளை நொறுக்கிய இந்தியப் பெண்கள் – நேகா ஜெ ஹிராநந்தனி (8+)
Girl Power: Indian Women Who Broke the Rules by Neha J Hiranandani
விஞ்ஞானிகள், கலைஞர்கள், தொழில்முனைவோர் முதலாக அரசிகள்வரை, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய – வியப்பூட்டக்கூடிய 50 பெண் ஆளுமைகளைப் பற்றி இந்தப் புத்தகம் சொல்கிறது. ஸ்காலஸ்டிக் இந்தியா, வெளியீடு!
தமிழில் : இரா. தமிழ்க்கனல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Childrens books released in october

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X