Chilli powder attack on Delhi CM : டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வரை அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க வந்த ஒரு நபர், கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை தூவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து 41 வயது மதிக்கத்தக்க அனில் குமார் ஷர்மாவினை கைது செய்தது டெல்லி காவல் துறை. விசாரணையின் போது "முதலமைச்சரின் வேலை அவருக்கு திருப்திகரமாக இல்லை என்பதால் தான் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை தூவினேன்” என்று கூறினார்.
கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது முன்னுக்குப் பின் முரணனான பதில்களை கூறிக்கொண்டும், பாரத் மாதா கீ ஜே என்றும் வந்தே மாதிரம் என்றும் கோசமிட்டுக் கொண்டு வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/kejriwal-chilli-powder-attack.jpg)
Chilli powder attack on Delhi CM : காவல்துறை விசாரணை
பின்னர் ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவரை விசாரணை செய்தார் டிசிபி அமித் ஷர்மா. அப்போது டிசிபியின் கேள்விகளுக்கு பதில் அளித்த அனில் குமார் ஷர்மா “9 வருட முதலமைச்சர் பதவியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பணி எனக்கு திருப்திகரமாக இல்லை” என்று கூறினார்.
பின்னர் இல்லை நான்கு வருடங்களாக அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இந்த காரியத்தை செய்தேன் என்று அவர் குறிப்பிட்டார். அனில் குமார் ஷர்மாவிடம் உங்களின் செயலுக்குப் பின்னால் பாஜகவின் பின்னணி இருக்கிறதா என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு “பாஜக மட்டுமே இந்நாட்டில் தேசப்பக்தி கொண்ட ஒரே கட்சி” என்று கூறினார்.
கெஜ்ரிவாலை மேலும் தேசத் துரோகி என்றும், தேச பக்தி கொண்டவர்களை ஒரு போதும் தோற்கடிக்க இயலாது என்பதை நிரூபிக்கவே இப்படி செய்தேன் என்றும் கூறினார்.
முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா இருவரும் தான் என்னுடைய நோக்கம். என்னால் இயன்ற அளவிற்கு என்னுடைய நோக்கத்தில் இன்று வெற்றி பெற்றுவிட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த செயலுக்காக என்னை சுட்டுக் கொன்றாலும் எனக்கு கவலையில்லை. ஒருவருக்கு நம்பிக்கை அளித்து ஏமாற்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று காவல் துறையினரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.
அனில் குமார் ஷர்மா நரைனா பகுதியில் வசித்து வந்தார். சமீபத்தில் ரஜ்ஜௌரி கார்டென் பகுதியில் பேயிங்க் கெஸ்ட்டாக வசித்து வருகிறார். அவருடைய மனைவியும் 11 வயது மகளும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
தலைமைச் செயலகம் சென்றது எப்படி ?
ஆம் ஆத்மி கட்சியின் வாலண்ட்டியர்களை சந்தித்து, தன்னுடைய அம்மாவிற்கு டி.பி. உள்ளதாக கூறி சில ஆவணங்களை கொடுத்துள்ளனர். பின்னர் கட்சியின் ரெஃப்ரண்சில் பப்ளிக் க்ரேவென்ஸ் செல்லிற்கு சென்றார். அங்கு டெல்லி அரசு மருத்துவமனைக்கு அவரின் அம்மாவை அழைத்து செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பின்னர் தலைமை செயலகத்திற்கு சென்று 3வது மாடியில் இருக்கும் கெஜ்ரிவாலை சந்தித்து மிளகாய் பொடியை தூவியிருக்கிறார். அவருடைய அம்மாவைப் பற்றி கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என காவல் துறை விசாராணையில் தெரிய வந்துள்ளது. To read this article in English
இது முதல் முறை இல்லை
- 2016ம் ஆண்டு ஜனவரி, மக்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால் மீது மை வீசிச் சென்றார் பெண் ஒருவர்
- 2016ம் ஆண்டு ஏப்ரல், செய்தியாளர் சந்திப்பில் கெஜ்ரிவால் மீது ஒருவர் ஷூவினை வீசினார்
- 2018ம் ஆண்டு நவம்பர், சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் முதல்வர் நின்றிருந்த மேடையில் பாட்டில்களை வீசினார்கள்