/tamil-ie/media/media_files/uploads/2019/09/chip.jpg)
wildlife trade,PMLA,marmosets,Ed,Chimpanzees, India, India news, அமலாக்கத்துறை, வனவிலங்குகள் வர்த்தகம், பணமோசடி சட்டம், சிம்பன்சி குரங்குகள்
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கு விவகாரத்தில், குற்றவாளியின் வீட்டில் இருந்து சிம்பன்சி குரங்குகள், நீள வால் குரங்குகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.
சுப்ரதீப் குகா எனும் நபர் மேற்கு வங்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததாக போலியான ஆவணங்களைத் தயாரித்து, சட்டவிரோதமாக காட்டில் வாழும் பறவைகளை இடம் மாற்றியதாக அந்த மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. பின்னர், மேற்கு வாங்க காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான அந்த வழக்கின் விசாரணையை அமலாக்கத் துறை ஏற்றது.
சுப்ரதீப் குப்தா வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சொத்துகளை முடக்கவும், கைப்பற்றவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு. அதன்படி குப்தா கடத்தி வைத்திருந்த விலங்குகளை அமலாக்கத் துறை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.