இந்திய எல்லையை நெருங்குகிறதா சீனா? வெளிவரும் பரபரப்பு தகவல்கள்!

ஹோட்டான் விமான தளத்தின் ரன்வே நீளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங்:

சீனாவின் விமானப்படையும், ராணுவமும் தொடர்ந்து, இந்திய எல்லைப் பகுதியை நெருங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் சீனா இன்று உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடு. மிகப் பெரிய பொருளாதாரம், அதை விட மிகப் பெரிய நுகர்வோர் சந்தை கொண்ட நாடு. இவர்களுக்கு இடையில் போர் வந்தால் அணு ஆயுதம் கூட பயன்படுத்துவார்கள், மொத்த உலக வரை படமே மாற்றி அமைக்கப்படலாம், உலக பொருளாதாரமே நலிவடைந்து போகலாம் என சர்வதேச போர் வல்லுநர்கள் பயப்படுகிறார்கள்.

டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்த உடனே ஷிகாட்ஸில் பல விமானப்படை தளங்களை சீனா மேம்படுத்தியுள்ளது. டிசம்பர் மாதம் இங்கு ஒரு புதிய ஓடுதளமும் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் திபெத் பகுதியில் இருந்து வந்த புலனாய்வுத் துறை அறிக்கையின் படி, சீனாவுக்கு சொந்த்தமான விமானப்படையும், ராணுவ படைமும் தொடர்ந்து இந்திய எல்லை பகுதியை நோட்டமிட்டு வருவதாகவும், எல்லைப்பகுதியை நெருங்க முயற்சிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

புலனாய்வு துறையின் அறிக்கையின் படி, சீனாவின் குயின்ஙாய் மாகாணத்தில் இருக்கும் க்ஸிங்கிங் பகுதியின் தென்மேற்கு பகுதியில் இருந்து 136 கி.மீ தொலைவில் விமான தளம் ஒன்றை அமைத்து வருகிறது சீனா. மேலும் திபெத்தில் லுந்த்ஸே, டிங்கிரி, மற்றும் புராங்க் போன்ற பகுதிகளிலும் 3 விமான தளங்களை அமைக்கும் திட்டத்தில் சீனா இறங்கி உள்ளது. இந்த நான்கு பகுதிகளும் இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்திருக்கும் பகுதிகளாகும்.

கோங்கார் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் விமானப்படை தளத்தை விரிவாக்கும் பணிகள் 2020ம் ஆண்டிற்குள் முடிவடைந்துவிடும். இதனைத் தொடர்ந்து இந்த பகுதியில் ராணுவ சேவை மிக தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டான் விமான தளத்தின் ரன்வே நீளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டோக்லோம் மோதலில் இந்திய-சீன உறவுகள் பாதிப்பை சந்தித்தன. அப்போதிருந்து, எல்லையில் சீனாவின் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இந்த காரணத்திற்காகவே சீனப் படைகளுக்கு மத்திய அரசு தங்களது எதிர்புகளை அதிரடியாக தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய எல்லையில் சீனாவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் ரஷ்யா எஸ்-400 ஏவுகணைகள் மற்றும் ரபல் விமானத்தை வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஆதரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரிப்பதுடன் , விமானப்படை, SU-30-MKI போன்ற போர் விமானங்களின் செயல்பாடுகளும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக, இந்திய விமானப் படை அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “டோக்லோம் மோதலில் இருந்து, சீன விமானப்படை நடவடிக்கைகள் சற்று மாறுதலாக தெரிகிறது.இந்திய எல்லைக்கு தனியாக ஒரு எல்லையை அமைக்க சீன இராணுவம் மூன்று அடுக்கில் கட்டுமான வேலையில் ஈடுப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

புலனாய்வு அறிக்கையின்படி, எல்லையற்ற நிலப்பகுதியில் 750 கிலோமீட்டர் தொலைவில் புதிய விமானநிலையத்தை நிர்மாணிப்பதற்கான வேலை நடைபெறுகிறது. அதே நேரத்தில், திபெத்தில் மூன்று புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மூன்று விமான நிலையங்களும் இந்தியாவின் கடல் எல்லைக்கு அருகே கட்டப்படவுள்ளன.

அறிக்கையின் படி, உள்நாட்டு விமானநிலையின் பகுதி கங்கை பகுதியில் நீட்டிக்கப்பட்டுள்ளது, அதன் வேலை 2020 வாக்கில் நிறைவு செய்யப்பட உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close