கோவிட்-19 தொற்றுநோய் பரவலில், சீனா மிகப்பெரிய எண்ணிகையை பதிவு செய்திருந்தாலும், சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று விகிதம் இந்தியாவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், நிபுணர்கள் கண்காணிப்பை முடுக்கிவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
“குறிப்பாக, கோவிட் புதிய வகை வைரஸ்களின் பரிணாம வளர்ச்சியை நாம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் பிரிவு தலைவர் டாக்டர் ஆர்.ஆர். கங்காகேத்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
அடுத்த சில வாரங்களில் சீனாவில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதால், இந்த வைரஸ் புதிய அபாயகரமான திரிபக மாறக்கூடும் என்ற கவலையை உருவாக்கியுள்ளது. இது மற்ற இடங்களில் தொற்றுநோய்களின் புதிய அலைகளைத் தூண்டும். இது நிச்சயமாக சாத்தியம் என்றாலும், அது எந்த வகையிலும் நிச்சயமில்லை என்று கங்காகேத்கர் கூறினார்.
“கோவிட் வைரஸ் மிக வேகமாக பரவும் இந்த அலைகள் மிக நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை. ஒரே நேரத்தில் பலருக்கு தொற்று ஏற்படுகிறது. உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம், தற்போதைய அலை விரைவில் முடிவுக்கு வரலாம். இது புதிய பிறழ்வுகளை உருவாக்க வைரஸுக்கு போதுமான நேரத்தை வழங்காது” என்று அவர் கூறினார்.
இந்தியா போன்ற பல நாடுகளில் கிட்டத்தட்ட முழுமையான தடுப்பூசி போடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மாண்டே, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, இங்கெ மற்றொரு கோவிட் அலை வரும் என்ற கவலை சிறிதும் ஆதாரமற்றவை என்று கூறினார்.
இந்தியா இதுவரை 2.2 பில்லியன் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை வழங்கியுள்ளது. மேலும், பலர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அவர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரு புதிய மாறுபாடு வந்து பாதிக்கப்பட்டால், இறப்பு அதிகரிப்பை நாம் காண முடியாது. நிச்சயமாக, கவலை இருக்கிறது. ஆனால், நாம் பீதி அடைய வேண்டியதில்லை. ஏற்கனவே, அரசாங்கம் நிலைமையை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது மற்றும் அரசு இயந்திரம் செயல்பாட்டில் உள்ளன” என்று தற்போது புனே பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியராக இருக்கும் டாக்டர் மாண்டே கூறினார்.
தொற்று நோய் நிபுணரும், ஐ.சி.எம்.ஆர் தேசிய கோவிட் பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் சஞ்சய் பூஜாரி, சீனாவிலும் பிற இடங்களிலும் தொற்று பரவலில் உள்ள ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய மாறுபாடு அடைந்த வைரசால் தற்போது இந்தியாவுக்கு அதிக ஆபத்து இல்லை என்று கூறினார்.
“மிக உயர்ந்த நோயெதிர்ப்புத் திறனைத் தாண்டிய அதிக திறனைக் கொண்ட ஒரு வைரஸ் மாறுபாடு இருந்தால் தவிர, அதிக நோய்க்கிருமித் தன்மையுடன் கடுமையான நோயை உண்டாக்கும் வரை, இந்தியாவில் தொற்றுகளின் உடனடி அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்க மாட்டோம். அனைத்து ஒமிக்ரான் துணை வைரஸ்களின் தொற்றுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கவில்லை. இருப்பினும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீனாவின் நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தியாவில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 200-க்கும் குறைவான தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 3,500 க்கும் குறைவாக உள்ளது. இறப்புகள் ஒற்றை இலக்கத்தில் உள்ளன. இதுவரை, இந்தியாவில் 4.46 கோடிக்கும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.3 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவின் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பிரதீப் அவதே இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது, கடந்த வாரம் மாநிலம் முழுவதுமே 10-12 புதிய கோவிட் தொற்று நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
“வென்டிலேட்டர் ஆதரவு சிகிச்சையில் ஒரு நபர்கூட இல்லை என்பது நல்ல செய்தி. மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் மட்டுமே தொற்று விகிதம் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. டிசம்பர் 18-ம் தேதி மகாராஷ்டிராவில் 9 புதிய தொற்றுகள் பதிவாகி இருந்தன” என்று டாக்டர் அவதே கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.