Advertisment

'அது துரதிர்ஷ்ட நிகழ்வு; இப்போது பிரச்னையை முறையாக கையாளுகிறோம்': சீனா

இரு மக்களிடையே நட்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாகும்.

author-image
WebDesk
New Update
'அது துரதிர்ஷ்ட நிகழ்வு; இப்போது பிரச்னையை முறையாக கையாளுகிறோம்': சீனா

 Shubhajit Roy

Advertisment

Galwan clashes unfortunate, now working to handle talks properly : இந்திய வீரர்கள் 20 பேர் கால்வான் தாக்குதலில் கொல்லப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகிறது. லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோலில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டங், இந்த கால்வான் நிகழ்வை ஒரு துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வரலாற்று கண்ணோட்டத்தில் மிகவும் சுருக்கமான தருணம் என்றும் மேற்கோள் காட்டியுள்ளார்.

பல்வேறு கட்டங்களில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சு வார்த்தை பற்றி கூறும் போது, தற்போது பிரச்சனையை கையாள அவர்கள் முறையாக செயல்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற்ற இந்தியா - சீனா இளைஞர் மன்றத்தில் சன் இவ்வாறு பேசியுள்ளார். இதனை எழுத்துப்பூர்வமான செவ்வாய்கிழமை அன்று சீன தூதரகம் வெளியிட்டது.

To read this article in English

வெபினாரில் பேசிய சன் “இரண்டு வளர்ந்து வரும் மாபெரும் நாடுகள் பழைய மனநிலையை கைவிட வேண்டும். ஒருவரின் தோல்வி ஒருவரின் வெற்றி என்ற மனப்பான்மையையும், ஜீரோ - சம் விளையாட்டையும் கைவிட வேண்டும். இல்லையெனில், நீங்கள் தவறாக வழிநடத்தப்படுவீர்கள், தவறான பாதையில் செல்வீர்கள்.

சீனாவும் இந்தியாவும் காண விரும்பாத துரதிர்ஷ்டமான சம்பவம் ஒன்று சில காலத்திற்கு முன்பு நடைபெற்றது. தற்போது அதனை முறையாக கையாளா நாங்கள் வேலை செய்கின்றோம். இரு தரப்பிலும் அமைதியான சாதகமான வெளிப்புற சூழலை கொண்டு வந்தால் மட்டுமே மேம்பாட்டு இலக்குகளை அடைய முடியும். சீனாவும் இந்தியாவும் அண்டை நாட்டினர். மோதல்களை தவிர்த்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார உறவுகள் குறித்து கூறிய போது, கால்வான் தாக்குதலுக்கு பிறகு, பொருளாதாரம் சரிய துவங்கியுள்ளது. இரண்டு நாடுகளின் பொருளாதாரம் காந்தம் போல் ஒன்றையொன்று ஈர்க்க வேண்டுமே தவிர வலுக்கட்டாயமாக அவற்றை பிரிக்க கூடாது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : சென்னை பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றமா? என்.ஐ.ஏ தீவிர விசாராணை!

சீன மொழியைக் கற்க விரும்பும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சன் "சீன மொழியைப் புரிந்துகொண்டு, சீன கலாச்சாரத்தை நேசிக்கும் அதிகமான இந்திய மாணவர்களை வளர்க்க சீன ஆசிரியர்களின் வலுவான குழு உதவி செய்யும்" என்றார். “எதிர்காலத்தில், சீனாவின் கல்வித் துறை இது தொடர்பாக தொடர்ந்து ஆதரவை வழங்கும்” என்றும் அவர் கூறினார்.

நாம் நம்முடைய நாட்டில் இருக்கும் சமூக அமைப்புகளை மதிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் சமூக அமைப்பும் சுதந்திரமாக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டது. இதில் மற்ற நாட்டினர் தலையிடக்கூடாது. சீனாவும் இந்தியாவும் வெவ்வேறூ விதமான சமூக அமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் நம் நாட்டின் நிலைமைகளை மேம்படுத்த வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகம் அற்புதமானது ஏன் என்றால் அது வேறுபாடுகளால் ஆனது. நாம் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ள வேண்டும். வேறுபாடுகளை ஒதுக்க பொதுவான காரணங்களை தேட வேண்டும். மனித குலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான சமூகத்தை நாம் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங் வெளிநாட்டு வளர்ச்சி மாதிரிகளை "இறக்குமதி" செய்யாது. சீன மாதிரியை "ஏற்றுமதியும்" செய்யாது. அதே போன்று மற்ற நாடுகளை அதன் நடைமுறையை "நகலெடுக்க" கேட்காது என்றும் கூறியதாக குறிப்பிட்டார். . "நாங்கள் எப்போதும் உலகளாவிய மக்களால் உருவாக்கப்பட்ட நாகரீகங்களை திறந்த, பரந்த மனதுடன் பார்க்கிறோம், மேலும் பரஸ்பர கற்றல் மனப்பான்மையுடன் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் நடத்துகிறோம்," என்றும் அவர் கூறினார்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான "பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவு" சரியான பாதையில் இருக்கிறது. அவை இரு நாடுகளின் நீண்டகால நலன்களுக்கு சேவை செய்கிறது. . "பரஸ்பர மரியாதை மற்றும் சமமாக நடத்தப்படுதலால் மட்டுமே நாம் தொடர்ந்து பரஸ்பர புரிதலையும் நம்பிக்கையையும் மேம்படுத்தவும், சந்தேகம் மற்றும் தவறான புரிதலைத் தவிர்க்கவும், அமைதியான சகவாழ்வு மற்றும் பொதுவான வளர்ச்சியின் பாதையில் செல்லவும் முடியும் என்று கூறினார்.

70 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, பல்வேறு சோதனைகளை கடந்து நிலைத்து நிற்கின்றனது. “இது ஒரு விஷயத்தால் இருதரப்பு நட்புறவு பாதிக்கப்படக் கூடாது. இந்த புதிய நூற்றாண்டில், இருதரப்பு உறவுகள் பின்தங்கிய நிலையில் இருந்து மாறி தொடர்ந்து முன்னேற வேண்டும், ”என்று அவர் கூறினார்.

நீண்ட காலத்திற்கான இலக்கை பரந்த மனப்பான்மையுடன் காண வேண்டும் என்று சீன மக்கள் அடிக்கடி கூறுவது உண்டு. அதன் பொருள் இன்றைய நிலையை மட்டும் பார்க்காமல், நீண்ட கால உறவுக்கான முன்னெடுப்பை காண வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நட்பு தான் பிரதானமானது. இதன் மூலமாக மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாட்டினை முறையாக கையாள முடியும். "சீனா மற்றும் இந்தியா, இரண்டு பண்டைய நாகரிகங்கள், இருதரப்பு உறவுகளை முறையாகக் கையாளும் ஞானமும் திறனும் உள்ளன என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

சீன தூதுவர், மொழி கற்றல் மற்றும் தொடர்பினை அவர்கள் தொடர்ந்து ஊக்குவிப்பார்கள் என்று கூறினார். மேலும் இந்திய கல்வி நிறுவனங்கள் உதவியுடன் சீன கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ், இந்தி, மற்றும் வங்க மொழிப்பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சீன மொழித்துறையை கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மொழித் திட்டங்களின் ஒத்துழைப்பு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏராளமான தூதர்களை வளர்த்துள்ளது, மேலும் இரு மக்களிடையே நட்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாகும், ”என்று அவர் கூறினார்.

இதுபோன்ற ஒரு பயனுள்ள அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும், கல்வி அதிகாரிகள் உட்பட இரு தரப்பினரின் கூட்டு முயற்சிகள் மூலம், இரு நாடுகளின் இளைஞர்களுக்கும் நட்பை மேம்படுத்துவதற்கும், புரிந்துணர்வை ஆழப்படுத்துவதற்கும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த தளங்களை உண்மையிலேயே வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment