scorecardresearch

உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி சீனாவிற்கு கவலை இல்லை – மோகன் பகவத்

மக்கள் மற்ற சக்திகளுக்கு அஞ்சுகிறார்கள். இந்தியா வழிநடத்த முன் வந்தால், அனைவருக்கும் பயனளிக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்

China has now risen doesnt care what world thinks of it RSS chief

China has now risen doesnt care what world thinks of it RSS chief : சோசியலிசம் மற்றும் விரிவாக்கத்திற்கு எதிரான மனப்பான்மையை சிந்தாந்தமாக கொண்டிருக்கின்றோம் என்றும் கூறும் சீனா, முந்தைய காலத்தில் சீன அரசர்கள் பின்பற்றிய அதே விரிவாக்க கொள்கைகளை தான் இப்போது பின்பற்றுகிறது என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.

உலகளாவிய பார்வையில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற கருத்தரங்களில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். அமெரிக்காவின் முயற்சிகள் இருந்தபோதிலும், பல துருவ உலகம் எழுந்துள்ளது என்றும் சீனா தனது செல்வாக்கை பரப்ப முயற்சிக்கிறது என்றும் கூறினார்.

சீனா இப்போது வளர்ந்துவிட்டது. அதை தான் சீனா விரும்பியது. கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து நாங்கள் சோசியலிச கொள்கைகள் கொண்டவர்கள் நாங்கள் எப்போதும் முதலாளித்துவத்திற்கு நகர மாட்டோம் என்பார்கள். நாங்கள் விரிவாக்கவாதிகள் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியெல்லாம் நடக்காது என்று கோல்வால்கர் ஏற்கனவே 1960களில் கூறியுள்ளார். கொஞ்சம் நாள் காத்திருங்கள். சீனா அதன் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றார். கன்ஃபூசியஸ் தத்துவங்களை கொஞ்சமாகவும் விரிவாக்கத்தை அதிகமாகவும் பின்பற்றுவார்கள் என்றார். அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்று சீனா பொருளாதாரத்தில் அதிக ஆதிக்கம் பெற்றுள்ளது. அதன் செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறது. உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி சீனாவிற்கு கவலை இல்லை. அது அதனுடைய இலக்கை அடைகிறது என்று பகவத் கூறியுள்ளார்.

இந்தியாவும் இதற்கு முன்பு இல்லாத வகையில் பலமாக இருக்கிறது. ஆட்டினை போன்று சிங்கம் வளர்க்கப்பட்டு, அது போலவே வாழ்ந்து, அதனிடம் கண்ணாடியை காட்டும் கதையை மேற்கோள்காட்டி, நமக்கு எப்போதுமே வல்லமை இருந்துள்ளது. ஆனால் நாம் அதை உணரவில்லை. 1962 போருக்கு பிறகு, இந்தியா ஒரு அழும் குழந்தை என்றும், அமெரிக்காவிடம் இருந்து உதவி பெற்று சீனாவை எதிர்கொள்ளும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஆனால் நம்முடைய வல்லமையை தேவையில்லாமல் பயன்படுத்தமாட்டோம். நாம் எப்போது வல்லமை அடைகின்றோமோ அப்போது நாம் பலவீனமானவர்களை பாதுகாப்போம். நாம் பணக்கார நாடாக மாறினால், ஈகை குணத்தை கையாளுவோம்.

ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை மேற்கோள்காட்டி பேசிய போது, இப்போது இது பல்முனை உலகம். ரஷ்யாவும் அதன் விளையாட்டை விளையாடுகிறது. வளர்ச்சி அடைந்து மேற்குலகை அடக்க நினைக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணற்ற சச்சரவுகள். இது உலகின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கிறது. மத அடிப்படைவாதம் மீண்டும் தலைதூக்குகிறது.

தேசியவாதம் குறித்து பேசிய போது அவர், தாராளமய ஜனநாயக கொள்கை உடையவர்கள் தேசியவாதம் தேவையற்றது. அனைத்து உலகமும் ஒன்று என்பார்கள். அது நல்ல எண்ணம் தான். ஆனால் தாராளமய ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் நாடுகள் தான் தேசியவாதத்தை கடைபிடிக்கின்றன. எனவே முழு உலகமும் ஒன்று, சந்தை சக்திகள் மக்களைத் தூண்டும் என்ற எண்ணம் கைவிடப்பட்டுள்ளது. மனிதன் அத்தகைய உலகை அறிவியலின் வலிமையில் கற்பனை செய்தான். அந்த அறிவியல் அதன் எல்லையை எட்டியுள்ளது. ” புதிய உயரும் சக்திகளில், இந்தியா மட்டுமே நம்பிக்கை, மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்க முடியும் என்பதால் இந்தியா அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். “மக்கள் மற்ற சக்திகளுக்கு அஞ்சுகிறார்கள். இந்தியா வழிநடத்த முன் வந்தால், அனைவருக்கும் பயனளிக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் ”என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: China has now risen doesnt care what world thinks of it rss chief