scorecardresearch

பாங்கோங் த்சோ பகுதியில் சீனாவின் ஹெலிபாட்; தயார் நிலையில் இந்தியா

பாங்காங் த்சோ எல்லைப் பிரச்சனை தொடர்பான எந்த   விவாதத்திற்கும் சீனா ஆர்வம் காட்டவில்லை.

Sushant Singh

லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் (எல்.ஐ.சி) இந்தியா, சீனா இராணுவங்களுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இராணுவத் தளபதிகளிடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இதுவரை திட்டமிடப்படாப்படாமல் தான் உள்ளது.

இந்நிலையில், பாங்கோங் த்சோ பகுதியில் சீன இராணுவம் தனது நிலைகளை பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. பாங்கோங் த்சோவின் தெற்கு கரையில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வந்த சீனா ராணுவம், தற்போது  ஃபிங்கர் 4 பகுதியில் ஹெலிபேட் கட்டுமானத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம்,  எல்லைக் கட்டுப்பாடுக் கோடு தொடர்பான கேள்விகளை சீனா ஒருதலைபட்சமாக மாற்றியமைக்க முயற்சிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சீனர்கள் பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரையில் தங்கள் நிலைகளை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஃபிங்கர் 4 பகுதியில் இப்போது ஒரு ஹெலிபேட் கட்டப்பட்டு வருகிறது. இதை தாண்டி, இந்த பகுதிகளில் கடந்த எட்டு வாரங்களாக சீனா ராணுவம் எல்லைக் கட்டமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

” ஃபிங்கர் 3  மலை உச்சி வழியாக பாங்கோங் த்சோ ஏரிக்கரை வரை சீனா ராணுவம் தனது ரோந்து பணியை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஃபிங்கர் 2 பகுதி வரை இந்தியா ராணுவத்தின் ரோந்து பணிகளை முடித்துக் கொள்ளுமாறு  அழுத்தம் கொடுத்து வருகிறது, ”என்றும் அதிகாரி கூறினார்.

“பாங்கோங் த்சோ பகுதியில் சீனா ராணுவம் தனது படையைக் குறைக்கவோ, ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்த நிலையை மீட்டெடுக்கவோ விரும்பவில்லை. அதனால்தான், பாங்காங் த்சோ எல்லை நிலவரம் தொடர்பான எந்த   விவாதத்திலும் சீனா ஆர்வம் காட்டவில்லை ” என மற்றொரு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

” எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் இந்தியப் படைகள்  போதுமான அளவு குவிக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள உள்ளூர் நிலப்பரப்பு  சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு சவாலான பகுதி என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்,”என்று அந்த அதிகாரி கூறினார்.

பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக்கரை பகுதி உரிமை கோருவது தொடர்பாக இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வருகிறது. தற்போதைய சர்ச்சைக்கு முன்னதாக, ஃபிங்கர்  8-ல் சீனா ராணுவம் நிரந்தர தளத்தைக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது  மேற்கில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபிங்கர்  4-ல் பதுங்கு குழிகள், கூடாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

இப்பகுதியில், இந்தியாவின் எல்லைக் கட்டுபாட்டுக் கோடு ஃபிங்கர்  8 வழியாக செல்வதாக  இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இந்திய ஃபிங்கர் 8 வரை தனது ரோந்து பணியை மேற்கொண்டனர் என்பது வரலாறு.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஃபிங்கர் 3  பகுதிக்கு அருகே இந்திய ராணுவத்துக்கான சொந்தமான முக்கிய தளம் உள்ளது. அதாவது, தற்போதைய சீன படைக்குவிப்புக்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த தளம் உள்ளது. ஃபிங்கர் 4ல் நிர்வாக தளத்தையும் இந்திய தரப்பு கொண்டுள்ளது. இந்த பகுதியில் தான் தற்போது இந்தியா  இராணுவம் இப்போது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த புள்ளியில், இரு நாட்டு ராணுவ வீரர்கள் 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி உள்ளனர்.

 

இதற்கிடையே, இரு தரப்பு இராணுவத் தளபதிகளிடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை திட்டமிடப்படவில்லை என்பதை டெல்லியில் உள்ள ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். முன்னதாக, கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் (எல்ஏசி) பதட்டங்களைக் குறைப்பதற்காக இருநாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு கமாண்டர்கள் கடந்த ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: China pla army undertaking helipad at pangong tso india china face off