இயற்கை பேரழிவின்போது இந்தியாவிற்கு உதவ முன்வந்த சீனா!

விண்வெளியில் மேம்பட்ட சொத்தாகக் கருதப்படும் செயற்கைகோள்களை கொண்ட ஒரு நாட்டில் பேரழிவு ஏற்பட்டாலும், அதன் செயற்கைக்கோள் அந்நேரத்தில் பேரழிவு ஏற்பட்ட பகுதியில் இருக்காது.

By: Published: July 27, 2019, 7:35:20 PM

Shubhajit Roy, Amitabh Sinha 

இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு  விண்வெளி டேட்டாக்களைப் பகிர்வதற்கான பலதரப்பு பொறிமுறையின்(மல்டிலேட்ரல் மெக்கானிஸம் ) ஒரு பகுதியாக, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட எட்டு நாடுகளிடமிருந்து இந்தியா தனது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த செயற்கைக்கோள் தகவல்களைப் பெற்றுள்ளது. இந்த எட்டு நாடுகளின் வரிசையில் சீனா முதலில் தன் டேட்டாக்களைப் பகிர்ந்துள்ளதாக இந்தியா அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 26 ) அறிவித்தது.

இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பீகாரின் பெரும்பகுதிகள் மோசமான வெள்ளத்தில் மாட்டியிருக்கும் சூழ்நிலையில் தான்,சீனா, காஃபென் -2 என்ற செயற்கைக்கோளிடமிருந்து அசாம் வெள்ளம் குறித்த டேட்டாக்களை ஜூலை 18-ம் தேதி பெற்றது.

வெளியுறவுத் தொடர்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், தேசிய தொலைநிலை உணர்திறன் மையம் (என்.ஆர்.எஸ்.சி) மற்றும் International Charter, Space and Major Disasters அமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும் 32 நாடுகளின் விண்வெளி ஏஜென்சிகள்,இயற்கை பேரழிவு ஏற்படும் போதெல்லாம் தங்களுக்குள் டேட்டா பகிர பயன்படும் platform-ஐ ஆக்ட்டிவேட் செய்யலாம் என்று தெரிவித்தார். International Charter, Space and Major Disasters சாசனத்தின் படி இந்தியாவின் இஸ்ரோ என்.ஆர்.எஸ்.சியாய் விளங்குகிறது.

பூமி-கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை நிலம் மற்றும் கடல் மேற்பரப்புகளில் எடுக்கின்றன. இந்த செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை பூமியின் சுற்றுப்பாதையில் அதி வேகத்தில் நகர்ந்து செல்பவைகளாக உள்ளன . அதனால் பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை அவைகள் சில நொடிகள் தான் நோட்டமிடும் . மீண்டும் ,அந்த குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு மணிநேரத்திற்கு பின்னரே திரும்பும். ஏன்? சில நேரங்களில் நாட்கள் கூட ஆகலாம் .
ஆகவே விண்வெளியில் மேம்பட்ட சொத்தாகக் கருதப்படும் செயற்கைகோள்களை கொண்ட ஒரு நாட்டில் பேரழிவு ஏற்பட்டாலும், அதன் செயற்கைக்கோள் அந்நேரத்தில் பேரழிவு ஏற்பட்ட பகுதியில் இருக்காது. ஆனால் ஏதேச்சையாக வேறு சில நாட்டின் செயற்கைக்கோள் இருக்கலாம். அதனால்தான் நாடுகள் தங்கள்  விண்வெளி வளங்களை ஒன்றிணைக்கவும் , செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டேட்டாக்களுக்கான தகவல்களைக் கோரும் உறுப்பு நாட்டிற்கு உதவவும் முடிவு செய்துள்ளன. இந்த பகிர்வினால் மாறுபட்ட தெளிவுத்திறன்,வெவ்வேறு கோணங்கள் மற்றும் வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஒரு குறிப்பிட்ட  நாடால்  பயன்படுத்த முடியும்.

ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள் டேட்டாக்கான கோரிக்கையை நாடுகள் “activate செய்யவேண்டும்”.

அசாம் வெள்ளம் விவகாரத்தில், இஸ்ரோ வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களைப் பற்றிய தகவல்களை கேட்டதையடுத்து உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை மற்ற விண்வெளி ஏஜென்சிகள் தர ஆரம்பித்தன.அதில் முதல் பகுதி டேட்டா சீனாவிடம் இருந்து வந்தது.

இந்தியாவின் சொந்த கார்டோசாட் -1 செயற்கைக்கோள் ஜூலை 18 அன்று இப்பகுதியைக் கடந்து படங்களை நமக்கு வழங்கின . சீனாவுக்கு பிறகு இதுவரை, கொரியா, கனடா , ஐரோப்பிய மற்றும் ரஷ்ய செயற்கைக்கோள்கள் இப்பகுதியை ஸ்கேன் செய்து, அசாமின் துப்ரி, மோரிகான், பார்பேட்டா, தேமாஜி மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து இஸ்ரோவுக்கு டேட்டாக்களை வழங்கியுள்ளன.

மே மாதம் நடந்த ஃபானி புயலின் போது இந்தியா கடைசியாக செயற்கைக்கோள் டேட்டா கோரியது. கடந்த ஆண்டில் , கேரள வெள்ளம் மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற மூன்று கோரிக்கைகளை அது அளித்தது. இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளுக்கும் தேவைப்படும் தகவல்களை வழக்கமாக வழங்குகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:China share satellite data with india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X