Advertisment

சீனாவின் சொல்லும் செயலும் வேறாக இருக்கிறது - ராஜ்நாத் சிங்!

ஆனால் இந்தியா அமைதியாக இந்த சூழலுக்கு தீர்வு காண விரும்புகிறது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
சீனாவின் சொல்லும் செயலும் வேறாக இருக்கிறது - ராஜ்நாத் சிங்!

Shubhajit Roy , Manoj C G

Advertisment

India China border issue : Rajnath Singh  சீனாவின் செயல்பாட்டிற்கும் சொல்லுக்கும் இடையே மாபெரும் இடைவெளி இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபையில் கூறியுள்ளார். இந்தியா தனது நலனுக்காக "எந்தவொரு பெரிய மற்றும் கடினமான நடவடிக்கையையும்" எடுப்பதில் இருந்து பின்வாங்காது என்றும், " லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்திய வீரர்களின் பாரம்பரிய மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட ரோந்து முறையை எக்காரணம் கொண்டும் கைவிடாது என்றும் கூறியுள்ளார். "உலகில் எந்த சக்தியும் இந்திய வீரர்களை ரோந்து செய்வதைத் தடுக்க முடியாது," என்று அவர் கூறினார்.

லடாக் குறித்து மக்களவையில் அறிக்கை வெளியிட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு மாநிலங்களவையில் பேசியுள்ளார். அப்போது, 130 கோடி மக்களுக்கும் இந்திய அரசு, எக்காரணம் கொண்டும் இந்தியாவை தலை குணிய விடமாட்டோம், என்ற உறுதியை அளிக்கின்றோம். அதே நேரத்தில் யாரையும் தலைகுனிய வைக்க விரும்பவும் இல்லை என்றும் கூறியுள்ளார் அவர். ஒருவர் போரினை தொடங்கிடலாம். ஆனால் அதனை முடிப்பது ஒருவர் கையில் இல்லை. பல சமயங்களில், உலகத்திற்கு சமாதானம் குறித்து அறிவித்த நிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் முயற்சிகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்று அவர் கூறினார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளிக்காததற்கான செயல்பாட்டு காரணங்களை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. ஆண்டனியின் கேள்விக்கு பதிலளித்த சிங், இந்திய வீரர்களின் ரோந்து முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறினார்.

To read this article in English

அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் அரசுக்கு ஆதரவாக இருக்க, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான கலந்துரையாடல் வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் வேறெந்த போராட்டத்தையும் பதிவு செய்யவில்லை. வெங்கய நாயுடுவின் ஆலோசனையை ஏற்று, தன்னுடைய அலுவலகத்தில் சில முக்கியமான தலைவர்களை சந்தித்து களநிலவரத்தை விளக்க ஒப்புக் கொண்டார் ராஜ்நாத். அவர்கள் அனைவரும் நம் மக்கள். நாட்டின் ஒற்றுமைக்காகவும், பாதுகாப்பிலும் அக்கறை செலுத்து உள்ளனர். அவர்களுக்கும் களநிலவரம் தெரியவேண்டும். அரசாங்கம் அவர்களுக்கு விளக்கமளித்தால், அவற்றை நம்பிக்கையுடன் எடுத்துக் கொண்டால், அது ஒரு சிறந்த சூழ்நிலையாக இருக்கும், ”வெங்கையா நாயுடு தனது அறிக்கையில் சிங்கிடம் கூறினார். அதற்கு முன்னதாக அவையில், இந்த பிரச்சனை எப்படி உருவானது என்றும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விளக்கினார். இந்த ஆண்டு நிலைமை மிகவும் வித்தியாசமானது. ஆனால் இந்தியா அமைதியாக இந்த சூழலுக்கு தீர்வு காண விரும்புகிறது என்று கூறினார்.

ஏப்ரல் மாதத்தில், கிழக்கு லடாக் பகுதி எல்லையில், துருப்புகள் மற்றும் ஆயுதங்களை குவித்தது. மே மாதத்தில், இந்தியாவின் சாதாரண பாரம்பரிய ரோந்து பணிக்கு இடையூறு அளித்ததன் மூலமாக அங்கு சச்சரவு மூண்டது. இது போன்ற சூழலை மிகவும் அமைதியான முறையில் கையாள வேண்டும் என்ற நிலைப்பாட்டை சீனா எடுத்திருக்கின்ற நிலையில், சீன செயல்பாடுகள் அவர்களின் வாக்குகளில் இருந்து வேறுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"ஒரு உதாரணம் என்னவென்றால், கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருந்தபோதும், ஆகஸ்ட் 29-30ம் தேதி இரவில் சீனத் தரப்பு மீண்டும் ஆத்திரமூட்டும் இராணுவ சூழ்ச்சிகளில் ஈடுபட்டது, பங்கோங் ஏரியின் தென் கரையோரப் பகுதியில் நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் மீண்டும், எல்.ஏ.சியில் நம் ஆயுதப்படைகளின் சரியான நேரத்தில் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறவிடாமல் தடுத்தன. சீன நடவடிக்கைகள் இருதரப்பு ஒப்பந்தங்களை புறக்கணிப்பதை பிரதிபலிக்கின்றன என்பது இந்த நிகழ்வுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது”என்று அவர் கூறினார்.

கிழக்கு லாடாக்கின் கோக்ரா, கொங்கா லா மற்றும் வடக்கு தெற்கு பன்கோங் ஏரி உட்பட தற்போது எல்.ஏ.சியில் சீன தரப்பு ராணுவத்தினரை அதிக அளவு குவித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் எல்லைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த பகுதிகளில் நமது ஆயுதப்படைகளும் எதிர்தரப்பில் குவிக்கப்பட்டுள்ளது. "நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும்" என்று சபைக்கு வாக்குறுதியளித்தபோது எந்த அர்த்தத்தில் கூறினார் என்று சிங்கிடம் ஆண்டனி கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இறையாண்மை என்பது ஏப்ரல் நடுப்பகுதியில் எல்லை எப்படி இருந்ததோ அப்படி இருப்பதைப் போன்றது. இறையாண்மையைப் பாதுகாப்பதன் அர்த்தம் இதுதான் ”என்று ஆண்டனி கூறினார்.  கால்வான் பள்ளத்தாக்கு ஒருபோதும் சர்ச்சைக்குரிய பகுதி அல்ல என்று கூறி, “கால்வான் பள்ளத்தாக்கில் கூட, நம் வீரர்கள் முன்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் இப்போது ரோந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாங்கோங் பகுதியிலும், 8 கி.மீ க்கும் அதிகமான பரப்பளவில், நாம் பயன்படுத்திய பகுதியில் ரோந்து செல்ல அவர்கள் தற்போது அனுமதிக்கவில்லை. முன்னதாக, ஃபிங்கர் பாயிண்ட் 8 வரை ரோந்து சென்றோம். இப்போது, ​​அது வரை ரோந்து செல்ல நமக்கு அனுமதி இல்லை. இந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரோந்துக்குப் பயன்படுத்திய இடங்களுக்கு ரோந்து செல்ல நம் இராணுவம் மற்றும் ஐ.டி.பி.பியை அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் அரசாங்கத்திடம் கோர விரும்புகிறேன்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த கருத்துக்களுக்கு பதிலளித்த சிங், “நான் மிகவும் மதிக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி அவர்கள், ரோந்து முறை குறித்து பேசியுள்ளார். மேலும் இந்தியாவை ரோந்துப் பணியில் இருந்து சீனா தடுக்கிறது என்று அவர் கூறியுள்ளார். நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்: அதுதான் சண்டைக்கு காரணம். . ரோந்து முறையைப் பொறுத்தவரை, ரோந்து முறை பாரம்பரியமானது, நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் வீரர்களை ரோந்துப் பணியில் இருந்து தடுக்க முடியாது. இதற்காக நமது வீரர்கள் தியாகங்களை செய்துள்ளனர். ரோந்து முறையில் எந்த மாற்றமும் இருக்காது. ”

சிங்கின் அறிக்கை குறித்து பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் ஷர்மா, நிலைமையை சீராக்குவதற்கான அரசியல்மட்ட பேச்சுவார்த்தைகள் தீர்ந்துவிடும் என்று நம்புகின்றோம். பழையை நிலைமையை, பேரம் பேசாமல் மீட்டெடுப்பது தான் நம்முடைய இறுதி நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த சிங், ஷர்மா கூறியதை அறிந்து கொண்டேன் என்று கூறினார்.

இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே செப்டம்பர் 10 ம் தேதி நடந்த மாஸ்கோ கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கையையும், செப்டம்பர் 4 ஆம் தேதி ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங்கிற்கும் இடையிலான சந்திப்பை நினைவு கூர்ந்தார். " எல்.ஏ.சியில் அனைத்து பகுதிகளிலிருந்தும் துருப்புக்களை விரைவாகவும் முழுமையாகவும் நிறுத்த வேண்டும் என்பது இரு கூட்டங்களின் போது, ​​இரு தரப்பு அமைச்சர்களிடையேயும் ஒருமித்த கருத்து இருந்தது” என்று கூறினார்.

எனவே, இரு தரப்பினரும், எல்லை பகுதிகளில் நிலவி வரும் பதட்டங்களைத் தணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் நிலைமையை மாற்ற ஒருதலைப்பட்சமாக முயற்சி செய்யக்கூடாது ”என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினார். எல்லைப்பகுதியில் நிலவும் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் 15ம் தேதி மற்றும் இன்று காலையிலும் மீண்டும் கூறியுள்ளார். பாங்கோங் ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிலவி வரும் பதட்டமான சூழலை தணிக்க, இருதரப்பில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் படி சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சீனா இதனை மதித்து லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் பகுதிகளில் முன்பு இருந்த நிலையை அடைய முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment