Advertisment

கால்வானில் மீண்டும் சீனா! அதிர்ச்சியூட்டும் சாட்டிலைட் புகைப்படங்கள்

கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் 20 வீரர்கள் கொல்லப்பட்ட இடத்தில், சீனா மீண்டும் கூடாரங்கள் அமைந்திருப்பது செயற்கோள் படங்களில் தெரிய வந்துள்ளது . 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கால்வானில் மீண்டும் சீனா! அதிர்ச்சியூட்டும் சாட்டிலைட் புகைப்படங்கள்

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் படைகளை குறைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இந்தியா- சீனா ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் 20 வீரர்கள் கொல்லப்பட்ட இடத்தில், சீனா மீண்டும் கூடாரங்கள் அமைந்திருப்பது செயற்கோள் படங்களில் தெரிய வந்துள்ளது .

Advertisment

ஜூன் 15 அன்று அகற்றப்பட்ட கூடாரத்தை, பெட்ரோலிங் பாயிண்ட்ஸ் 14- ல் ரோந்து பணிகளில் மேற்கொண்ட வீரர்கள்  மீண்டும் கண்டதாக ராணுவத்தில் மூத்த அதிகாரி ஒருவர் தகவலை உறுதிபடுத்தினார். செயற்கைக்கோள் படங்களில் உள்ள சீனா கட்டமைப்புகள் தொடர்பாக  இராணுவம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

'Maxar' எனும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம், ஜூன் 22ம் தேதியன்று  இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாடு கோடு குறித்த புகைப்படத்தில் , 14வது எல்லைச் சாவடிக்கு அருகே சீனர்கள் தற்காப்பு கூடாரத்தை உருவாக்கியது தெரியவந்தது. இந்த கட்டமைப்பு ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை கட்டப்பட்டிருக்க வேண்ட்டும். ஏனெனில், ஜூன் 15 ஜூன் 16 அன்று பிளானட் லேப்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்களில் இத்தகைய கட்டமைப்புகள் இல்லை.

“எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகே சீனத் துருப்புகள் கூடாரங்களை உருவாக்க முற்பட்டனர்.  மேலும், அத்தகைய செயல்களில் இருந்து பின்வாங்கவும் மறுத்து விட்ட காரணத்தினால்  ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் வன்முறைக்கு வழிவகுத்தது என்று எல்லை மோதல் தொடர்பான கேள்விகளை பிரதமர் ஜூன் 19ம் தேதி நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  பிரதமர் தெளிவுப்படுத்தியதாக” ஜூன் 20 அன்று  பிரதமர் அலுவலகம் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற  லெப்டினென்ட் ஜெனரல் ஏ.எல்.சவன் இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், "ஜூன் 15 முதல் ஜூன் 22 வரையிலான , தேதிகளில் இந்த கூடாரத்தை சீனர்கள் அமைத்துள்ளனர்  என்பது தெளிவாகிறது. சுமார் 20-30 வீரர்கள் இந்த கூடாரத்தில் இருக்க முடியும்" என்று தெரிவித்தார்.

செயற்கைகோள்  புகைப்படங்களில் காண்பிக்கப்படும் இந்த கூடாரம் இந்தியாவின் எல்லைக்குள்  உள்ளதா? அல்லது சீனாவின் எல்லைக்குள் உள்ளதா? என்பதை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எல்லைக் காட்டுபாட்டு கோடு பகுதியை சீனா மேலும் விரிவுபடுத்துகிறது என்பது மட்டும் நிச்சயமாக தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார்.

இந்த கூடாரம் இந்தியாவின் எல்லைக்குள் இருந்தால், அது முன்பிருந்த நிலையை தன்னிச்சையாக  மாற்றுகிறது  என்றும் அவர் தெரிவித்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India Indian Army China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment