Advertisment

யு.பி.எஸ்.சி-யில் ''லேட்டரல் எண்ட்ரி'' நியமனம்: சிராக் பாஸ்வான் கடும் விமர்சனம்!

அரசு பதவிகளுக்கான நியமனங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு, இடஒதுக்கீடு தொடர்பான விதிகள் பின்பற்றப்பட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chirag Paswan

எல்ஜேபி (ஆர்வி) தலைவரும் மக்களவை எம்பியுமான சிராக் பாஸ்வான்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) பதிவிகளுக்கான ஆள்சேர்ப்பில் லேட்டரல் எண்ட்ரி வழியில் நுழைவது "முற்றிலும் தவறு" என்று கூறியுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவரும் ஹாஜிபூர் தொகுதி எம்பியுமான சிராக் பாஸ்வான் இந்த பிரச்சினையை அரசாங்கத்தின் முன் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

Read In English: Chirag Paswan calls lateral entry in UPSC ‘completely wrong’, says will ‘raise the matter before government’

மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் காலியாக உள்ள இணைச் செயலர், இயக்குநர் மற்றும் துணைச் செயலர் பதவிகளுக்கு "திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கான லேட்டரல் ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் என்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஆகஸ்ட் 17) ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

இந்த விளம்பரம் குறித்து பேசிய லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரும், என்.டி.ஏ கூட்டணி எம்.பியுமான சிராக் பாஸ்வான், அதிகாரவர்க்கத்தில் இருக்கும் 45 பதவிகளுக்கான ஆள்சேர்ப்பில் லேட்டரல் எண்ட்ரி வழியில் நுழைவதை விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது கட்சியின் நிலைப்பாட்டை உயர்த்திக் கூறிய அவர், இத்தகைய நியமனங்களுக்கு நாங்கள் "எப்போதுமே ஆதரவாக இல்லை" என்று கூறினார்.

மேலும் “அரசு நியமனங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு, இடஒதுக்கீடு தொடர்பான விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இந்த விவகாரம் வெளியில் வந்த விதம் எனக்கு கவலை அளிப்பதாக இருந்தது. தற்போது எங்கள் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது, என்பதால் இந்த பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தளம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

சிராக் பாஸ்வானின் இந்த விமர்சனத்தை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராகுல்காந்தி, மக்களவையில் இது "தலித்துகள், ஓபிசிகள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல். “பாஜகவின் ராம ராஜ்ஜியத்தின் திரிக்கப்பட்ட பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், பகுஜன்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறிக்கவும் முயல்கிறது” என்று கூறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment