scorecardresearch

போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட நடிகை; ஷார்ஜா சிறையிலிருந்து விடுதலை

போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பாலிவுட் நடிகை கிரிசன் பெரேரா; ஷார்ஜா சிறையிலிருந்து விடுதலை; 48 மணி நேரத்தில் இந்தியா திரும்புகிறார்

Chrisann-Pereira
நடிகை கிரிசன் பெரேரா

Mohamed Thaver

போதைப்பொருள் வழக்கில் சிக்கியதாகக் கூறப்பட்டு ஏப்ரல் 1 முதல் ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போரிவலியைச் சேர்ந்த நடிகை கிரிசன் பெரேரா (27), புதன்கிழமை மாலை விடுவிக்கப்பட்டார், மேலும் 48 மணி நேரத்தில் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என விசாரணையை மேற்பார்வையிட்ட காவல்துறை இணை ஆணையர் (குற்றப்பிரிவு) லக்மி கவுதம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குடும்பத்தினர் இன்னும் ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், அவர் எப்படி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை, மேலும் அவரது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவு அமைச்சகத்தை (MEA) அணுகுவதற்காக எஃப்.ஐ.ஆர் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை விமர்சிக்கலாம்; மாற்றினால் பெரும் ஆபத்து; ஃபாலி நாரிமன்

மற்றொரு பாதிக்கப்பட்டவரான கிளேட்டன் ரோட்ரிக்ஸ், இதே குற்றவாளியால் ஜோடிக்கப்பட்ட போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பிப்ரவரி முதல் ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வருகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய கிரிசன் பெரேராவின் தாயார் பிரேமிளா, “இது ஒரு அதிசயம். இறுதியாக எனது மகள் விடுதலை செய்யப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளோம். அடுத்த 48 மணி நேரத்தில் அவர் இந்தியாவுக்கு வருவார் என நம்புகிறோம்,” என்று கூறினார்.

கிரிசன் பெரேரா எப்படி விடுவிக்கப்பட்டார் என்று கேட்டபோது, ​​“எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த நாளின் தொடக்கத்தில் நாங்கள் அவளிடம் பேசியபோது, ​​​​அவள் தனது ஆடைகளை (அதாவது அவள் சிறைக்கு அழைத்து வரப்பட்டப்போது அணிந்திருந்த ஆடைகள்) திரும்ப எடுத்துக் கொள்ள அழைக்கப்பட்டதாக அவள் சொன்னாள். சில மணி நேரம் கழித்து தான் விடுவிக்கப்பட்டதாகக் கூறி எங்களிடம் தொலைப்பேசியில் பேசினாள். யாருடைய தலையீடு இதற்கு வழிவகுத்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். என் பெண்ணைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தாயார் பிரேமிளா கூறினார்.

கிரிசன் பெரேரா செய்த வீடியோ அழைப்பின் ஒரு கிளிப்பில், பிரேமிளா தனது மகளிடம், “கிறிசன் நீ வெளியில் இருக்கிறாயா? நீ விடுதலையாகிவிட்டாய்”, என மகிழ்ச்சியில் அங்குமிங்கும் குதித்தார்.

தவறான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு அவரது விடுதலை உதவியாக இருக்கும் என்று அவரது சகோதரர் கெவின் கூறும்போது, ​​கண்ணீருடன் கிரிசன் பெரேரா தலையசைக்கிறார்.

கிரிசன் பெரேராவை போரிவிலியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் அந்தோணி பால் (35) போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தாகக் கூறப்படும் நிலையில், கிரிசன் பெரேரா ஏப்ரல் 1 முதல் ஷார்ஜா சிறையில் இருந்தார். அந்தோணி பால் தனது நண்பரான ராஜேஷ் போரட்டை திறமை மேலாளர் ரவியாக நடிக்க வைத்து, முன்பு சடக் 2 மற்றும் பத்லா ஹவுஸ் படங்களில் பணியாற்றிய நடிகை கிரிசன் பெரேராவை அணுகினார்.

ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச வெப் சீரிஸூக்கான ஆடிஷனில் கலந்து கொள்ளுமாறு கிரிசன் பெரேராவிடம் ரவி கூறியதாகக் கூறப்படுகிறது, அதற்கான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் 1 ஆம் தேதி, கிரிசன் ஷார்ஜாவுக்குச் செல்ல இருந்தபோது, ​​ரவி அவளிடம் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த ஒரு நினைவுப் பரிசைக் கொடுத்தான். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் நடிகையை கைது செய்ய ஷார்ஜா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மும்பை குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில், கோவிட் சமயத்தில் கிரிசன் பெரேராவின் தாயாருடன் ஏற்பட்ட சண்டையில் கோபமாக இருந்த அந்தோணி பால், பழிவாங்கும் விதமாக இதை திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கிரிசன் பெரேராவைத் தவிர, அந்தோணி பால் மேலும் நான்கு பேரை இதேபோல் வழக்குகளில் சிக்க வைத்துள்ளார், அவர்களில் ஒருவரான கிளேட்டன் ரோட்ரிக்ஸ் இன்னும் ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Chrisann pereira released from sharjah prison to be back in india in next 48 hours