கடனைக் கட்டுங்கள் இல்லை ஜெயிலுக்குச் செல்லுங்கள்... அம்பானியை எச்சரித்த உச்ச நீதிமன்றம்

Anil Ambani Found Guilty in Ericsson Case : உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்ததால் 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்த...

Ericsson Case Anil Ambani found guilty :  ஜியோ வருவதற்கு முன்பு வரை ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை நடத்தி வந்தவர் அனில் அம்பானி. தொலைத் தொடர்பு வர்த்தகத்தில் எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

கடனில் தத்தளித்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுவனம் நஷ்டமடைந்தது. மேலும் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடனில் இருந்தது அந்த நிறுவனம். ரூ.24 ஆயிரம் கோடியை அனில் அம்பானிக்கு கொடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் அவருடைய சகோதரர் முகேஷ் அம்பானி.

இந்நிலையில் அனில் அம்பானி நடத்தி வந்த நிறுவனம், அலைவரிசையை பயன்படுத்தியதிற்கு ரூ.2,900 கோடியை தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு அளிக்கவில்லை. அதே போல் எரிக்சன் நிறுவனத்திற்கும் 1,600 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீதிமன்ற உதவியை நாடிய எரிக்சன் நிறுவனம், செட்டில்மெண்டிற்கு பிறகு ரூ.550 கோடி ரூபாயை பெற்றுக் கொள்ள ஒத்துக் கொண்டது எரிக்சன் நிறுவனம். அந்த தொகையை செலுத்த அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு செப்டம் 30ம் தேதிக்குள் அதனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்த உத்தரவை மீறினார் அம்பானி.

ஒரு கோடி ரூபாய் அபராதம்

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக அம்பானி மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்தது எரிக்சன் நிறுவனம். டிசம்பர்15க்குள் 12% வட்டியுடன் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது எரிக்சன் நிறுவனம்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறையாக கடனை திருப்பி செலுத்த வேண்டும் இல்லை மூன்று மாதம் சிறை தண்டனை பெற வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது.

இதன்படி அடுத்த நான்கு வாரங்களுக்குள் 453 கோடி ரூபாயை அனில் அம்பானி திருப்பி செலுத்த வேண்டும். அதே போல் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்ததால் 1 கோடி ரூபாயை அபராதம் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

Web Title:

Ericsson case anil ambani found guilty sc says three months jail if he fails to pay rs 453 cr

Related Posts
ஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)
ஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)

மஞ்சு விரட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். காளைகளின் கழுத்தில் மஞ்சல் துண்டு கட்டி விடுவார்கள். அதனை காளையர்கள் ஒன்று சேர்ந்து விரட்டி பிடித்து காளையை அடக்கி கழுத்தில் உள்ள மஞ்சல் துண்டை அவிழ்ப்பர். இதற்கு மஞ்சுவிரட்டு என பெயர். விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்… இன்றைய தமிழக செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு […]

துரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி
துரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி

Jallikattu protest fame Julie : ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்ட படத்தை இந்நேரத்தில் பகிர்ந்தவிவகாரம், சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close