Advertisment

தேர்தல் இந்து ராகுல் காந்தி - பா.ஜ.க விமர்சனம்; யாத்திரையில் கோவிலுக்கு செல்லும் ராகுல்!

காங்கிரஸ் தலைவர்கள் யாத்திரையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் புனித தலங்களுக்குச் சென்று, “மோடியிடம் வணங்குபவர்களுக்காக, விவசாயிகள், தொழிலாளர்கள் போலவே உண்மையான தபஸ்விகளை பா.ஜ.க புறக்கணிக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi, Rahul Gandhi temple visit, Rahul Gandhi bharat jodo yatra, Rahul Gandhi ujjain temple, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குஜராத், பாஜக, சுனவி இந்து, தேர்தல் இந்து, காங்கிரஸ், bjp rahul gandhi temple visit, bjp chunavi hindu rahul gandhi, bjp, pm narendra modi, political pulse,Tamil Indian Express

காங்கிரஸ் தலைவர்கள் யாத்திரையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் புனித தலங்களுக்குச் சென்று, “மோடியிடம் வணங்குபவர்களுக்காக, விவசாயிகள், தொழிலாளர்கள் போலவே உண்மையான தபஸ்விகளை பா.ஜ.க புறக்கணிக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

Advertisment

ஒரு கோவிலுக்குச் செல்லுங்கள், அவர்கள் உங்கள் மதச் சான்றுகளைக் கேள்விக்குள்ளாக்கலாம். பலவற்றைப் பார்வையிடலாம். அது ஒரு பிரச்சினையாக இல்லாமல் போகலாம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, கோவில்களில், குறிப்பாக இந்து கோவில்களில், நெற்றியில் திருநீருடன் காட்சியளிப்பது, சாமி கும்பிடுவது போன்ற படங்களை வெளியிடுவது, பூசாரிகளுடன் உரையாடும் வீடியோக்களை வெளியிடுவது போன்றவற்றை செய்து வருகிறார். உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் அவர் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து சாமி கும்பிடுவதைக் காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து அவசியம் இல்லாமல் கவர்ந்து வருகிறார்.

இந்த உஜ்ஜயினி கோவில் மத்திய மாநில, பா.ஜ.க ஆட்சியின் கீழ் கட்டப்பட்டு கொண்டாடப்படும் முக்கிய கோவில்களில் ஒன்று. ஒரு மாதத்திற்கு முன்புதான், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட விழாவில், மஹாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மிகவும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது.

கோயில்களுக்கு செல்வதால் ராகுல் காந்தி மீது பா.ஜ.க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மத்தியப் பிரதேச கலாச்சாரத் துறை அமைச்சர் உஷா தாக்கூர் வியாழக்கிழமை கூறுகையில், “எந்தவொரு ஆன்மீகச் செயலையும் அரசியல் லாபங்களுக்கான வழியாக மாற்றக்கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். கோயிலுக்கு செல்லும் நடவடிக்கைகள் நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம். நீங்கள் கோவில்களுக்குச் செல்வது வரவேற்கத்தக்கது. ஆனால், பிரார்த்தனை செய்வது, சாமி தரிசனம் செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலில் அகமதாபாத்தில் உள்ள வாஸ்னாவில் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: “அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்து, தர்மத்தையும், இந்துக்களையும் அவமானப்படுத்தினால், இந்து மத மக்களிடம் இருந்து ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பதை புரிந்து கொண்டதால், அவர்களுக்கு (காங்கிரஸ்) இப்போது இந்து தர்மம் நினைவுக்கு வந்திருக்கிறது.” என்று கூறினார்.

இந்தத் தேர்தலைப் போல் அல்லாமல், குஜராத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக ராகுல் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே வந்துள்ளார். அவரது பாரத் ஜோடோ யாத்திரையின் இடைவேளையில் - காங்கிரஸ் தலைவர் 2017 தேர்தலில் குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக கோயில்களுக்குச் செல்வது உட்பட விரிவாக பிரச்சாரம் செய்தார். அப்போதும் ராகுலை கேலி செய்தது பாஜக. ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தியது.

“ராகுல் காந்தி தனது இந்து பூர்வீகத்தை நிரூபிக்க பாசாங்கு காட்டுகிறார்” என்று பா.ஜ.க ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டி ட்வீட் செய்துள்ளார்: “அரவிந்த் கெஜ்ரிவாலைப் போலவே ராகுல் காந்தியும் ஒரு இந்து… எந்தத் தவறும் செய்யாதீர்கள். இது தேர்தலுடன் தொடர்புடைய உத்தியும் பதிலடி மற்றும் மன நிபந்தமும் மட்டுமே, வேறொன்றுமில்லை.” என்று அமித் மாளவியா கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலில் ராகுல் ஆரத்தி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ள மாளவியா, “தேர்தல் இந்து’வாக மட்டுமே இருந்தால் ராகுல் காந்திக்கு ஆரத்தி கடிகார முள் சுற்றும் திசையில் சுற்றப்படுவதில் அறிவியல்பூர்வமான காரணம் இருப்பது தெரியும். (பூமி கடிகார திசையில் நகர்கிறது, எனவே சுற்றுச்சூழல் அதிர்வு அந்த இயக்கத்துடன் ஒத்திசைவாக உள்ளது). அவர் இப்படி பொதுவில் தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ளக் கூடாது.” என்று கூறியுள்ளார்.

(வட துருவத்தில் இருந்து பார்த்தால், பூமி உண்மையில் எதிரெதிர் திசையில் நகர்கிறது; தென் துருவத்திலிருந்து, அது கடிகார முள் திசையில் சுழல்கிறது.)

ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்ற பிறகு, “தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை - சிவன், ராமர் மற்றும் கிருஷ்ணர் போன்ற கடவுள்களின் உண்மையான தபஸ்விகளை பா.ஜ.க அரசு அவமதிக்கிறது” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நெற்றியில் திருநீரு, இந்து கடவுள்கள் மற்றும் பகவத் கீதை பற்றிய கருத்துகளுடன் ராகுல் காந்தி தனது உரையை நிகழ்த்தினார். “'தபஸ்விகளை வழிபட வேண்டும் என்று இந்து மதம் நமக்குக் கற்றுத் தருகிறது… அப்படியென்றால், ஏன் அவர்களை வழிபடுவதில்லை?… அவர்களுக்கு அரசாங்கம் எதையும் தருவதில்லை. ஆனால், நரேந்திர மோடியை பூஜை செய்பவர்களுக்கு எல்லாம் கொடுக்கிறது.” என்று கூறினார். “மோடியை வணங்குபவர்களுக்கு, அவர்கள் விரும்பும் அனைத்தும், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள், மின்சாரம், தண்ணீர்.. அனைத்தும் கிடைக்கும்” என்று கூறினார்.

ஓம்காரேஷ்வர் மற்றும் மஹாகாலேஷ்வர் கோயில்கள் இந்தியாவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் ஆகும்.

பாரத் ஜோடோ யாத்திரையில் அக்டோபர் மாதம் கர்நாடகாவில் மேற்கொண்டபோது, ஒரே நாளில் ​​மைசூருவில் உள்ள சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயில், மஸ்ஜித்-இ-ஆசம் மற்றும் செயின்ட் பிலோமினாஸ் தேவாலயத்துக்கு சென்ற ராகுல் காந்தி, இந்து முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என ஆகிய மூன்று முக்கிய மதங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தார்.

கோவில் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி “இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கு மத நல்லிணக்கம் தான் அடித்தளம்” என்று கூறியுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம், வெறுப்பு மற்றும் வேறுபாடு ஆகியவற்றிற்கு எதிராக நாட்டை ஒன்றிணைப்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கழித்து, அவர் கர்நாடகாவில் மிகவும் அதிக வாக்குகளைக் கொண்ட லிங்காயத் சமூகத்தின் முக்கிய மடத்துக்குச் சென்றார்.

தெலுங்கானாவில் இருந்து நவம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிராவிற்குள் நுழைந்த ராகுல் காந்தி, குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான நான்டெட் சாஹிப் குருத்வாராவுக்குச் சென்றார். காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி கந்தா சின்னத்துடன் கூடிய முக்காடு அணிந்து பிரார்த்தனை செய்யும் வீடியோவையும், யாரோ ஒருவர் அவரது தலையில் தஸ்தாரைச் சுற்றியுள்ள வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தி நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்திற்காக பிரார்த்தனை செய்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை செப்டம்பர் மாதம், தமிழகத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே, சர்ச்சைக்குரிய தமிழ் போதகர் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் காந்தி சந்தித்தார். இவர்களது சந்திப்பு வீடியோக்கள் வெளியானதை அடுத்து, ராகுல் காந்தியை பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment