பாலியல் வன்முறை வழக்கு : கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருத்தர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் இருக்கும் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால் மீது பாலியல் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
அவர் மீதான நடவடிக்கைகளை திருச்சபை எடுக்காததன் காரணமாக தற்போது காவல்துறையில் புகார் கூறியுள்ளார். மேலும் அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த கன்னியாஸ்திரி ஜலந்தரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கொச்சி “மிஷனரீஸ் ஆஃப் ஜீஸஸ்” திருச்சபையில் ஊழியம் செய்து வருகிறார்.
பாலியல் வன்முறை வழக்கு - போராட்டம் நடத்தும் கன்னியாஸ்திரிகள்
திருச்சபை ஆயரை கைது செய்யக் கோரி கொச்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை தொடர்ந்து மறுத்து வருகிறார் பிரான்கோ. இச்சமயத்தில் நேற்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் புகைப்படங்களை ஊடகங்களுக்கு அளித்தது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரியின் சகோதரர் கேரளாவில் புகார் ஒன்றை காவல்துறையிடம் கொடுத்திருக்கிறார்.
கோட்டயம் எஸ்.பி. ஹரி சங்கர் இதைப் பற்றி குறிப்பிடுகையில் “அந்த கன்னியாஸ்திரியின் சகோதரர் கொடுத்த புகாரை ஐபிசி 228(ஏ)வின் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார்.
To read this article in English
புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை
கேரளா வுமன்ஸ் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோஸ்பின் இது பற்றி கூறுகையில் “புகைப்படங்களை ஊடகங்களுக்கு கொடுத்தவர்கள் மீது சட்ட ரீதியாக விரைவில் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
புகார் தெரிவிக்கப்பட்டிருக்கும் கன்னியாஸ்திரி மற்றும் பிரான்கோ ஆகியோர் மூன்று வருடங்களுக்கு முன்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று கன்னியாஸ்திரிகளில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரின் புகைப்படத்தினை வெளியிடக்கூடாது என்று அறிந்திருந்தும் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள். ஒருவரை அவமதிக்கும் செயலாக இது இருப்பதால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கொச்சியில் போராட்டம் நடத்திய ஐந்து கன்னியாஸ்திரிகளில் ஒருவரான அனுபமா கூறியிருக்கிறார்.