கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டம், பெரியபட்னாவில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் நடந்த இந்த சம்பவம் திருட்டு முயற்சியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கர்நாடகாவில், மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை குழந்தை இயேசுவின் சிலையை சேதப்படுத்தி, காணிக்கை பெட்டியில் இருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மைசூரு மாவட்டம் பெரியபட்னாவில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் நடந்த இந்த சம்பவம் திருட்டு சம்பவமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தேவாயலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் குழந்தை இயேசு சிலை உடைக்கப்பட்டதும், காணிக்கைப் பெட்டியில் இருந்த பணம் காணாமல் போனதும் தேவாலய ஊழியர்கள் பார்த்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து தேவாலய போதகர் போலீசில் புகார் அளித்தார். தேவாலயம் சேதப்படுத்தப்பட்டது குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மர்ம நபர்கள் தேவாலயத்தின் பின்புற கதவு வழியாக நுழைந்துள்ளனர் என்று கூறினார்.
மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் ஊடகங்களிடம் கூறுகையில், “யார் சேதப்படுத்தினார்கள் என்பதைக் கண்டுபிடிக்க நாங்கள் சிறப்பு குழுக்களை அமைத்துள்ளோம், விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.
மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் ஊடகங்களிடம் கூறுகையில், “தேவாலயத்திற்கு வெளியே இருந்த பணம் மற்றும் காணிக்கை பெட்டியை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், இது முதல் பார்வையில் திருட்டு சம்பவம் போல தெரிகிறது. நாங்கள் சிறப்பு குழுக்களை அமைத்துள்ளோம், விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.
ஒரு போலீஸ் அதிகாரிகள் கருத்துப்படி, மர்ம நபர்கள் தேவாலயத்தின் பின்புற கதவு வழியாக நுழைந்துள்ளனர். “ஏசுவின் மற்ற சிலைகள் தொடப்படாததாலும், பணம் காணாமல் போயுள்ளதாலௌம் இதை தாக்குதல் என்று முடிவு செய்ய முடியாது. தேவாலய வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. அருகிலுள்ள சிசிடிவி ஒரு பள்ளியில் அமைந்துள்ளது. மேலும், விசாரணைக்காக நாங்கள் காட்சிகள் மூலம் செல்கிறோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"