பிப்ரவரி 1ம் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீதக்கும் கூடுதலான பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்குப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பிப்ரவரி 1ம் முதல் 2021 பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கக்கூடிய கொரோனா பெருந்தொற்று கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை நடைமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
தற்போதைய கொரோனா கண்காணிப்பு உத்தரவில் கீழ்கண்ட கூடுதல் தளர்வுகள் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்பட கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே, சம்பந்தப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் சமூக/ஆன்மிக/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வி/கலாச்சார/மதம் சார்ந்த கூட்டங்கள் அனுமதிக்கப்படும். ஏற்கனவே, இவைகள் 50 சதவீத இருக்கையுடன், 200 பேருக்கு மிகாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 1ம் தேதிமுதல் திரையரங்குகள் 50 சதவீதக்கும் கூடுதலான பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்குப்படும். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளும் நிலைமையை பொருத்து தளர்த்தப்படும்.
எந்த தடையுமின்றி விளையாட்டு வீரர்களுக்கு நீச்சல் குளங்கள் அனுமதிக்கப்படும். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும்.
முகக்கவசங்கள் அணிதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளி ஆகிய சரியான கோவிட்- 19 நடத்தை வழிமுறையை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil