கடந்த மாதம் சண்டிகர் விமான நிலையத்தில் பா.ஜ.க எம்.பி கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: CISF constable Kulwinder Kaur who slapped Kangana Ranaut transferred to Bengaluru
இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், குல்விந்தர் கவுர் பணி இடைநீக்கத்தில் இருக்கிறார். அவர் பெங்களூருவில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப்-ன் ரிசர்வ் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
ஷஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு குல்விந்தர் கவுரை சி.ஐ.எஸ்.எஃப் பணி இடைநீக்கம் செய்து அவருக்கு எதிராக உள் விசாரணையைத் தொடங்கியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலைய காவல் நிலையத்தில் கவுர் மீது தாக்குதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
டெல்லிக்கு காங்ரா எம்.பி கங்கனா ரணாவத் ஜூன் 6-ம் தேதி சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் ஏறச் செல்லும் போது, பாதுகாப்புப் பகுதியில் கங்கனா ரணாவத்தை கவுர் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்தின்போது விவசாயிகள் குறித்து அவர் பேசியதற்காக கங்கனா மீது கோபமடைந்ததாக குல்விந்தர் கவுர் குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“