இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் பிரபல மலையாள எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை கேரள மாநில உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
கேரளத்தின் எழுத்தாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்பவர் சிவிக் சந்திரன். 73 வயதான இவர் கோழிக்கோட்டில் வசித்துவருகிறார்.
இவர் மீது இளம்பெண் எழுத்தாளர் ஒருவர் ஏப்ரல் 2ஆம் தேதி புகார் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சிவிக் சந்திரன் முன்ஜாமின் பெற்றுவிட்டார்.
இந்த நிலையில் மற்றொரு பெண் எழுத்தாள் ஒருவர் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கோழிக்கோடு கடற்கரையில் சிவிக் சந்திரன் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது, தன் மீது பாலியல் புகார் அளித்த பெண் தொடர்பாக புகைப்படம் ஒன்றையும் மனுவுடன் இணைத்திருந்தார்.
அந்தப் படத்தில் புகார் அளித்த பெண் சிவிக் சந்திரன் தொடை மீது அரைகுறை ஆடையுடன் இருப்பது போல் இருந்தது. இந்தப் படத்தை பார்த்து சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிபதி கிருஷ்ண குமார், சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆடை அறைகுறையாக உள்ளது.
மேலும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதுபோல் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார். நீதிபதியின் ஆடை குறித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மாநில உயர் நீதிமன்றம் சிவிக் சந்திரனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்ததுடன், மாவட்ட நீதிபதியையும் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil