Civil services officers learn archery : பொறுமை, கவனம் ஆகியவற்றை சிவில் தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு வழங்க அவர்களுக்கு வில்வித்தை கற்றுத்தரப்பட உள்ளது. முசோரியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி நேசனல் அகாடெமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேசனில் ( Lal Bahadur Shastri National Academy of Administration (LBSNAA)) கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயிற்சியின் ஒரு அங்கமாக நவம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வில்வித்தை பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியை குஜராத்தை சேர்ந்த தேசிய வில்வித்தை சாம்பியன் தினேஷ் பில் வழங்க உள்ளார். தினேஷ் பில் தன்னுடைய வாழ்நாளை, பழங்குடி இளைஞர்களுக்கு விளையாட்டு மற்றும் வில்வித்தை கற்றுத்தருவதற்காக ஒதுக்கியுள்ளார். அந்த பயிற்சி மையம் குஜராத்தில் நஸ்வாதி தாலுகாவில் அமைந்திருக்கும் சோட்டா உதெய்ப்பூரில் அமைந்திருக்கிறது.
செவ்வாய் கிழமை குஜராத்தில் இருந்து முசோரி சென்றிருக்கும் அவர் 370 அதிகாரிகளுக்கு வில்வித்தை பயிற்சி வழங்க உள்ளார். உடல் வலிமையை விட மன வலிமை மிகவும் முக்கியமானது. கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு என அனைத்தையும் ஒரு விளையாட்டு வீரர் அறிந்து வைத்திருக்க வேண்டும். இது நிச்சயம் இந்த அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
To read this article in English
இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர் என்.கே.சுதான்ஷூ ஆவார். குஜராத் ஸ்போர்ட்ஸ் ஆத்தாரிட்டிக்கு அவர் எழுதிய கடிதத்தில் “சிவில் தேர்வு எழுதியவர்களுக்கு வருங்காலத்தில் பேலன்ஸ், போக்கஸ், எம்பத்தி. சென்சிட்டிவிட்டி போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் தேவை. அவர்கள் பணிகாலத்தின் போது ஏற்படும் சவாலான பிரச்சனைகளை சந்திக்கும் அளவுக்கான தலைமைப் பண்பு அவர்களுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் பிரதமரை சந்தித்த சிவில் பயிற்சியாளர்கள் தற்போதைய பயிற்சி நிறைவுற்றவுடன் விளையாட்டு தொடர்பாகவும் பயிற்சி பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சோட்டா உதெய்ப்பூர் கலெக்டெர் சுஜல் மாயாத்ரா அறிவிக்கையில் “கேவதியா காலனியில் பயிற்சி பெறுவதற்காக சிவில் பயிற்சியாளர்கள் இங்கு வந்த போது சோட்டா உதெய்பூரில் நடைபெற்ற கல்ச்சுரல் ப்ரோகிராமில் பங்கேற்றனர். பழங்குடி இனத்தில் இருந்து வந்த ஒரு நபர் வில்வித்தையில் வெற்றி பெற்றிருப்பது தினேஷ் பில்லுக்கு இந்த பகுதியில் பெரும் பேரினை பெற்றுக் கொடுத்துள்ளது. உதெய்ப்பூரில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் இவருடைய வில்வித்தையும் நடத்தப்பட்டது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சிவில் பயிற்சி பெறும் அதிகாரிகள் வில்வித்தையை கற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.