அயோத்தி தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் ஒரு பகுதியாக இருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்துல் நசீரை ஆந்திர பிரதேச ஆளுநராக நியமித்ததற்கு, “பெரும் கறை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்” என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அயோத்தி வழக்கு பெஞ்சிற்கு தலைமை வகித்த முன்னாள் இந்திய தலைமை நீதிபதி (CJI) ரஞ்சன் கோகோய், ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 19, 2020 அன்று ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும், இதே போன்ற காட்சிகள் நடந்தன, எதிர்க்கட்சிகள் அவரைக் குறிவைத்தன.
இதையும் படியுங்கள்: ’அப்பட்டமான உளவுத்துறை தோல்வி’; புலவாமா நினைவு நாளில் திக்விஜய் சிங் மீண்டும் குற்றச்சாட்டு
ரஞ்சன் கோகோய் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் “அவமானம்” என்ற கோஷங்கள் காரணமாக மாநிலங்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், அவரது நியமனம் சில முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமிருந்தும் கோபத்தை வெளிப்படுத்தியது.
அதிகாரப்பூர்வ ராஜ்யசபா போர்ட்டலின்படி ரஞ்சன் கோகோயின் நாடாளுமன்ற பதிவு, அவர் இதுவரை பூஜ்ஜியம் என்ற அளவில் கேள்விகளைக் கேட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது, அதாவது அவர் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவர் எந்த ஒரு தனிநபர் மசோதாவையும் அறிமுகப்படுத்தவில்லை. "எனது பங்கேற்பு" என்ற பிரிவில் உறுப்பினர்களின் ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகளை பார்க்க முடியும். ஆனால் போர்ட்டலில் ரஞ்சன் கோகோயின் பதிவில் "பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை" என்று கூறுகிறது.
அவர் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒரு அங்கமாக உள்ளார் என்று போர்டல் குறிப்பிடுகிறது.
மாநிலங்களவையில் கோகோயின் வருகை வெறும் 30 சதவீதமாக உள்ளது என்று பி.ஆர்.எஸ் சட்டவாக்க ஆய்வு கூறுகிறது. எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் கையொப்பமிட வேண்டிய வருகைப் பதிவேட்டின் மூலம் பாராளுமன்றத்திற்கு வருகை பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கோட்பாட்டளவில், எந்த நாளிலும் பதிவேட்டில் கையொப்பமிடாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு அமர்வில் கலந்துகொண்டிருக்கலாம்.
அமர்வு | தேதிகள் | மொத்த அமர்வுகள் | வருகை |
பட்ஜெட் கூட்டத்தொடர் 2020 | 31/1/2020 – 30/04/2020 | 34 | 2 |
பட்ஜெட் கூட்டத்தொடர் 2021 | 29/1/2021 – 25/3/2021 | 33 | 1 |
மழைக்கால கூட்டத்தொடர் 2021 | 19/7/2021 - 11/8/2021 | 17 | 1 |
குளிர்கால கூட்டத்தொடர் 2021 | 29/11/2021 - 22/12/2021 |
18 | 7 |
பட்ஜெட் கூட்டத்தொடர் 2022 | 31/1/2022 – 8/4/2022 | 29 | 7 |
மழைக்கால கூட்டத்தொடர் 2022 | 18/7/2022 – 8/8/2022 | 16 | 6 |
குளிர்கால கூட்டத்தொடர் 2022 | 18/7/2022 – 8/8/2022 | 13 | 7 |
பட்ஜெட் கூட்டத்தொடர் (தற்போதைய) | 31/1/2023 முதல் 13/2/23 வரை; 13/3/23 அன்று மீண்டும் கூடும். | 27 | 6 |
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.