/tamil-ie/media/media_files/uploads/2019/05/z531.jpg)
தலைமை நீதிபதி பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் : நீதிபதி சந்திரசூட் காட்டம்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கிறார். அவர் உடனடியாக ஒரு வக்கீலை கொண்டு தனது தரப்பு தெரிவிக்க வேண்டும் இல்லையேல், அவராகவே வாதிடலாம் என்று கூறிய பின்னரும் அவர் வராமல் இருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல். இந்நிலை தொடர்ந்தால், இந்த விசாரணை கைவிட வேண்டிவரும் என்று நீதிபதி சந்திரசூட் மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதி சந்திரசூட் 10வது இடத்தில் உள்ளார். இவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக 2022 முதல் 2024 வரை பதவி வகிக்க வாய்ப்பு உண்டு.
நீதிபதி சந்திரசூட், நீதிபதி நாரிமனுடன் இணைந்து விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் பாப்டே, இந்து மல்ஹோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜியை, கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.
சீனியாரிட்டியில் 5வது இடத்தில் உள்ள நாரிமன், நீதிபதிகளுக்கான கொலீஜியத்தில் உறுப்பினராக உள்ளார்.
நாரிமன், சந்திரசூட், பாப்டேவை சந்தித்து பேசியது தவறு என்று சுப்ரீம் கோர்ட் செகரேட்டரி ஜெனரல் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் நீதிபதி சந்திரசூட்டின் காட்டமான கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.