தலைமை நீதிபதியை தகுதி நீக்கும் வழக்கை திரும்ப பெற்றது ஏன்?? வழக்கறிஞர் கபில் சிபல் விளக்கம்!

தலைமை நீதிபதியை நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி-க்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றது ஏன் என்று  வழக்கறிஞர் கபில் சிபல் விவரித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டது. இதன்படி, காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட  7 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திட்ட்டு கண்டன தீர்மான நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் வழங்கினர்.

ஆனால் தலைமை நீதிபதியின் நடத்தை மீறலுக்கு ஆதாரம் இல்லை என சுட்டிக்காட்டி,  வெங்கையா நாயுடு  எதிர்கட்சிகள் அளித்த நோட்டீஸை நிராகரித்தார். இந்நிலையில்,   இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும், சட்ட வல்லுநருமான கபில் சிபல் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு  இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  மேலும், இவ்வளவு முக்கியமான வழக்கை சீனியர் நீதிபதிகள் விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டும் காங்கிரச் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

காங்கிரஸின் கடைசி ஆயுதமும் பலன் அளிக்கவில்லை

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிக் கொண்ட மர்வு எப்படி உருவானது? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க நீதிபதிகள் பெஞ்ச் மறுத்து விட்டது.  கபில் சிபல் பலமுறிஅ கேள்வி எழுப்பியும்  நீதிபதிகள் பதில் அளிக்க மறுத்ததால் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளுவதாக  கபில் சிபல தெரிவித்தார்.

அதன் பின்பு, செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதுக்குறித்து அவ் அர் பேசியதாவது,  “ உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் நீதித்துறை மரபுபடி அமைக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தின் 145 சி பிரிவின்படி, அரசியல் சாசன விவகாரம் தொடர்பான வழக்கில் குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும். அப்படி விசாரணை நடத்தும் நீதிபதிகளை, நிர்வாக ஆர்டர் என்ற அடிப்படையில், தலைமை நீதிபதி நியமிக்க முடியாது.

ஜுடிஷியல் ஆர்டர்தான் தேவை. ஆனால், இந்த வழக்கில் ஜுடிஷியல் ஆர்டர் பிறப்பிக்கப்படவில்லை. எனவே 5 நீதிபதிகள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் என்ற விவரத்தை அறிந்து கொள்ள வேண்டியது மனுதாரரின் கடமையாகிறது. சட்டப்படியும், இதை அறிய, மனுதாரருக்கு உரிமையுள்ளது. ஆனால் கடைசி வரை இதற்கான பதில் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்று  தெரிவித்துள்ளார்.

×Close
×Close