இந்து அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை அனுமதிக்க தயாரா? வக்பு வழக்கில் இடைக்கால உத்தரவுகளை நிறுத்திவைத்த சுப்ரீம் கோர்ட்

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது; மேலும் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது; மேலும் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Waqf petitions

வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான மனுக்களை இன்று (ஏப்ரல் 16) விசாரணை செய்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் பி.வி சஞ்சய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: CJI-led bench to hear petitions challenging new Waqf Act today

வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் வெடித்த வன்முறையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கண்டித்தது.

சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவராக இருந்த இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, "ஒரு விஷயம் மிகவும் கவலையளிக்கிறது, வன்முறை நடந்து வருகிறது" என்றார். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

Advertisment
Advertisements

இந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லீம் உறுப்பினர்களை அனுமதிக்க தயாரா? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் வாரியத்தின் அதிகாரபூர்வ உறுப்பினர்களை, அவர்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், வாரியத்தில் நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், மற்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீங்கள் அமைப்பை அழுத்தக்கூடிய ஒரு நிகழ்வு" இருப்பதாகக் கூறினார்.

தலைமை நீதிபதியின் கருத்துகளுடன் உடன்படும் அதே வேளையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சொலிசிட்டர் ஜெனரலுடன் உடன்படவில்லை. "யார் யாருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, முஸ்லிமாக பிறந்த நபர் இஸ்லாத்தை 5 ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றிய ஆதாரத்தை மீண்டும் ஏன் காட்ட வேண்டும். வக்பு சட்ட திருத்தம் 20 கோடி மக்களின் உரிமையை பறிப்பதாகவுள்ளது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.

திருத்தங்களை எதிர்க்கும் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றார்.

வக்ஃப் சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் போன்ற மாவட்டங்கள் வன்முறையைக் கண்டுள்ளன, இந்துக்கள் குழுக்கள் தங்கள் உயிருக்கு பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இந்த மசோதாவை எதிர்த்து ஏறத்தாழ 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.பி., அசாதுதீன் ஓவைசி, டி.எம்.சி எம்.பி., மஹுவா மொய்த்ரா, ஆர்.ஜே.டி எம்.பி., மனோஜ் குமார் ஜா, சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியா உர் ரஹ்மான், காங்கிரஸ் எம்.பி-க்கள் இம்ரான் மசூத் மற்றும் முகமது ஜாவேத், முன்னாள் எம்.பி. உதித் ராஜ், மௌலானா மஹ்மூத் ஆசாத் மதனி உள்ளிட்டோரும் இந்த மசோதாவிற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர். 

இஸ்லாமின் ஸ்தாபனம், நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அம்சமாக வக்பு அமைகிறது. எனவே, அரசியலமைப்பின் கீழ் அவற்றுக்கு பாதுகாப்பு உரிமை இருப்பதாக மனுக்கள் வாதிடுகின்றன.

இது மட்டுமின்றி, சட்டப்பிரிவு 14-ஐ  (சமத்துவத்திற்கான உரிமை), புதிய மசோதா மீறுகிறது என்று மனுக்களில் குறிப்பிடுகின்றன. கூடுதலாக, சட்டப்பிரிவுகள் 15 (மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு), 21 (வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை), 25 (மத சுதந்திரம்), 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்), 29 (சிறுபான்மையினரின் உரிமைகள்), 30 (மத மற்றும் மொழி சிறுபான்மையினரின் உரிமை) மற்றும் 300A (சொத்துக்கான உரிமை) போன்றவற்றுக்கு எதிராக மசோதா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் முதன்மை மனுதாரரான ஓவைசி தரப்பில் வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆஜராகிறார். மேலும், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான் மற்றும் ஷோப் ஆலம் ஆகியோர் புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வாதாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களான ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை வக்பு சட்ட திருத்த மசோதா செல்லுபடியாகும் என்ற வகையில் அதற்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

வக்பு சொத்துகளை திறம்பட நிர்வகிப்பதற்கான சட்டப்பூர்வ, தொழில்நுட்ப ரீதியாக உந்துதல் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பை இந்தச் சட்டம் எதிர்பார்க்கிறது என்று மத்தியப் பிரதேசம் கூறியது. அதே நேரத்தில் பயனாளிகளின் சமூக - பொருளாதாரத்தை இந்த மசோதா மேம்படுத்துகிறது என்று அசாம் தெரிவித்துள்ளது.

குர்கானில் உள்ள குருத்வாரா சிங் சபாவின் தலைவர் தயா சிங், ஏப்ரல் 14 அன்று மற்றொரு புதிய மனுவை தாக்கல் செய்தார். 2025 ஆம் ஆண்டு சட்டம், மத அடிப்படையில் தொண்டு செய்வதற்கான தனது அடிப்படை உரிமையை மீறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய சட்ட திருத்தம், முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புகளை உருவாக்குவதைத் தடுக்கிறது.

waqf board bill

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: