Advertisment

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்வருகிறது தலைமை நீதிபதி அலுவலகம்

ரஞ்சன் கோகோய்: யாரும் ஒளிபுகா அமைப்பை இயக்கவில்லை. யாரும் இருளில் இருக்க விரும்பவில்லை. யாரையும் இருளில் வைக்க யாரும் விரும்பவில்லை. நாம் ஒரு கோட்பாடை  வரைய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News today live updates

News today live updates

2010 டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிபடுத்தும் வகையில், இன்று (நவமபர் 13) இந்திய தலைமை நீதிபதியின் அலுவலகம்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வரும் பொது அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisment

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும் இந்த அமர்வில் அடங்குவர்.

ஆர்டிஐ சட்டத்தை நீதித்துறையை கண்காணிக்கும்  ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது என்று எச்சரிக்கும் அதே வேளையில், சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச், வெளிப்படைத்தன்மையைக் கையாளும் போது நீதித்துறையின்  சுதந்திரத் தன்மையை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உச்சநீதிமன்றமும் , தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் பொது அதிகாரிகளாக கருதப்படுவார்கள் என்ற டெல்லி உயர்நீதிமன்றம்  தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி  மேல்முறையீடு செய்திருந்தார்.

தற்போது வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில், " நீதிபதிகள் நியமன முறையில்,  நீதித்துறையின் சுதந்திரம் இணைக்கப்பட்டிருப்பதால், கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட முடியும் என்றும், அதற்கான காரணங்கள் வெளியிடமுடியாது" என்றும் தெரிவித்திருக்கிறது.

நீதிபதி சஞ்சீவ் கன்னா தனது தீர்ப்பில், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை ஒன்றாக  சேர்ந்தே இயங்குகின்றன என்று தெரிவித்தார். நீதிபதி கன்னாவுடன் உடன்பட்ட நீதிபதி என்.வி.ரமணா தனது தீர்ப்பில் நீதிபதி கண்ணாவின்  கருத்தை உடன்படுவதாக தெரிவித்தார்.

"யாரும் ஒளிபுகா அமைப்பை இயக்கவில்லை. யாரும் இருளில் இருக்க விரும்பவில்லை. யாரையும் இருளில் வைக்க யாரும் விரும்பவில்லை. நாம் ஒரு கோட்பாடை  வரைய வேண்டும் , ஆனால் அது அங்கே என்பதுதான் கேள்வி. வெளிப்படைத்தன்மை என்ற பெயரில், நீங்கள் நீதித்துறையை அழிக்க முடியாது, ”என்று சி.ஜே.ஐ கோகோய் வழக்கு விசாரணையின் போது தெரிவித்து இருந்தார் .

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சி.ஜே.ஐ அலுவலகத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கை சமூக ஆர்வலர் எஸ்.சி அகர்வால் அவர்களால் தொடங்கப்பட்டது. அவரது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்  ஆவார். உச்ச நீதிமன்றம் அதன் சொந்த காரணத்திற்கு அதுவே  தீர்ப்பளிக்கக் கூடாது என்றாலும், அவசியக் கோட்பாடு காரணமாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Supreme Court Of India Rti
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment