உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர்கள் சிலர் சத்தமாக வாதாடுவதால், நிதானத்தை இழந்த இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா, கத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.
மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோரின் வழக்கை விசாரிக்கும் போது, தயவுசெய்து கத்த வேண்டாம் என நீதிபதி தெரிவித்தார். அப்போது கருத்து தெரிவித்த திவான், நான் கத்தவில்லை. எங்கள் உரிமைகளை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு வந்த வழக்கில், தனக்கு ஏற்கனவே கிடைத்ததை விட கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து வலியுறுத்தியதால், தலைமை நீதிபதி வருத்தமடைந்தார்
இதுகுறித்து பேசிய என்.வி ரமணா, இது கட்டுக்கடங்காமல் போகிறது. வழக்கறிஞர்களுக்கு என்ன நேர்ந்தது என கேள்வி எழுப்பினார். அப்போது, இளம் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம், அவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியதாகவும், தனது குரலை உயர்த்தியதை உணரவில்லை என்றும் தெரிவித்தனர்.
உடனே பேசிய நீதிபதி, நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதை வரவேற்கிறோம், ஆனால் தயவு செய்து கூச்சலிடக் கற்றுக்கொள்ளாதீர்கள். முடியவில்லை என்றார்.
தொடர்ந்து, அடுத்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்கள் ஏஎம் சிங்வி, சிஎஸ் வைத்தியநாதன் மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணை ஆரம்பத்திலே கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, எல்லா மூத்த வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து கூச்சலிட வேண்டாம்.இளைஞர்களின் வேகத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்போது சில மூத்த வழக்கறிஞர்களும் கூச்சலிடுகின்றனர். இதைச் சொல்வதில் மிகவும் வருந்துகிறேன் என்றார்.
மீண்டும் களத்தில்
எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற லாலு, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நேராக தனது மூத்த மகளும் ஆர்ஜேடி ராஜ்யசபா எம்பியுமான மிசா பார்தியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குச் சென்றார். அடுத்த வாரம், அவர் பீகாருக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், அங்கு அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், "ராஜினாமா" செய்வதாக அறிவித்துள்ளார்,
மிசா பார்தியின் இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய லாலு, கார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஆர்ஜேடி கூட்டு சேர்ந்திருப்பதாக கூறிய தேஜ் பிரதாப்பின் கூற்றை நிராகரித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.