சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் தொடுத்த பெண் வழக்கறிஞர் மீதான மோசடி வழக்கை மனுதாரர் திரும்ப பெற்றதால் முடித்து வைக்கப்பட்டது.
ரஞ்சன் கோகோய் குற்றமற்றவர் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் குழு, இதற்கு தகுந்த ஆதாரமில்லாததால், ரஞ்சன் கோகோய் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாலியல் புகார் தொடுத்த பெண் வழக்கறிஞர் மீது, நவீன் குமார் என்பவர் மோசடி புகார் அளித்தால், நவீன் குமார் அதில் தெரிவித்துள்ளதாவது, சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி, அந்த பெண் வழக்கறிஞர் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டார். ஆனால், அவர் சொன்னபடி, தனக்கு வேலை வாங்கித்தரவில்லை என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை, டில்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதனிடயே, நவீன் குமார், அந்த பெண் வழக்கறிஞர் மீது அளித்த புகாரை திரும்ப பெற்றார். தனது சுயமுடிவின் அடிப்படையிலேயே புகாரை வாபஸ் பெற்றேன். இந்த விவகாரத்தில் தன்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என்று நவீன் குமார் கூறியுள்ளார்.நவீன் குமார், டில்லி போலீசிடம் அளித்த புகாரை திரும்பபெற்ற நிலையில், டில்லி கோர்ட், பெண் வழக்கறிஞர் மீதான வழக்கை முடித்துவைத்தது.