Seema Chishti, Ananthakrishnan G, Sushant Singh
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை
உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழுவை நியமித்து, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கினை விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.ஏ.பொப்டே, என்.வி. ரமணா மற்றும் இந்திரா பானர்ஜீ கொண்ட அமர்வு இந்த விசாரணையை நடத்த உள்ளது. இந்த விசாரணை வருகின்ற வெள்ளிக்கிழமை மதியம் துவங்குகிறது.
தலைமை நீதிபதி, இந்த புகார் குறித்த விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் ரமணா மற்றும் இந்திராவிடம் கேட்டேன். இருவரும் ஒப்புக்கொண்ட பின்னர், நீதிமன்றம் முன்பு எடுத்துச் சென்றோம். நீதிமன்றத்தின் முழு சம்மதமும் கிடைத்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேட்டி அளித்தார் பொப்டே.
உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய்க்கு அடுத்த நிலையில் பொப்டேவும், அவருக்கு அடுத்த இடத்தில் ரமணாவும் உள்ளனர். மூன்று நபர்கள் கொண்ட அமர்வில் இடம் பெற்றுள்ள பெண் நீதிபதி இந்திரா பானர்ஜீ ஆவார். உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகளில் இவரும் ஒருவர்.
இது நீதிமன்ற விசாரணையாக நடைபெறாமல், டிபார்ட்மெண்டல் விசாரணையாக நடத்தப்படும் என்றும், உச்ச நீதிமன்றம் சார்பில், வழக்கு தொடுத்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தலைமை நீதிபதி தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அதற்கு அப்பெண் மறுப்பு கூறவும், அவரை வேலையில் இருந்து நீக்கியதாகவும், அவருடைய கணவர் மற்றும் மைத்துனர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு புகார் வந்ததில் இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஒரு தரப்பினர், இது போன்ற பொய்யான வழக்குகளால் ஏற்பட இருக்கும் அபாயம் பற்றி வருத்தப்படுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ, நாட்டில் திறம்பட இயங்கும் ஒரு நிர்வாகத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.
உத்சவ் சிங் பெய்ன்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
செவ்வாய் கிழமை காலை, உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர் உத்சவ் சிங் பெய்ன்ஸ்-க்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. தவறான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சிக்க வைத்து, அவருடைய வேலையை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்பதற்கான சதித்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், புகார் அளித்த பெண்ணுக்காக ஆஜராக எனக்கு பெரிய அளவில் பணம் கொடுக்க முற்பட்டனர் என்றும் அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் அருண் மிஸ்ராம் ரோஹிண்டன் நரிமன் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு அவரின் மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நேற்று காலை 10:30 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால் பெய்ன்ஸ் கோட்டிற்கு வரவில்லை.
இதனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய பெய்ன்ஸ்க்கு காவல் வழங்க கோரி, டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு உத்தரவிட்டுள்ளத்து உச்ச நீதிமன்றம். நாளை அவர் நீதிமன்றம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 20ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் தன் தரப்பின் நியாயத்தை கூறிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்று கூறியிருந்தார். அது தொடர்பான முழுமையான கட்டுரையை படிக்க