ஃபேஸ்புக் மூலமாக டீச்சரை மிரட்டிய 7 ஆம் வகுப்பு மாணவன் சஸ்பெண்ட்!

தனது வகுப்பு ஆசிரியை மற்றும் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக ஃபேஸ்புக்கில் 7 ஆம் வகுப்பு மாணவன் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில், மிகவும்  புகழ்பெற்றது குருகிராம் பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது வகுப்பு ஆசிரியைக்கு சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் நட்பாகியுள்ளன. தினமும், பள்ளியில் இருந்து வந்த பின்பு ஃபேஸ்புக்கில் அந்த ஆசிரியைக்கு மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது, […]

தனது வகுப்பு ஆசிரியை மற்றும் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக ஃபேஸ்புக்கில் 7 ஆம் வகுப்பு மாணவன் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில், மிகவும்  புகழ்பெற்றது குருகிராம் பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது வகுப்பு ஆசிரியைக்கு சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் நட்பாகியுள்ளன. தினமும், பள்ளியில் இருந்து வந்த பின்பு ஃபேஸ்புக்கில் அந்த ஆசிரியைக்கு மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது, பாடத்தில் இருக்கும் சந்தேகங்களை கேட்பது போன்றவற்றை வழக்கமாக வைத்துள்ளான்.

இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன், அன்றைய தினம் வகுப்பு பாடத்தை முடிக்காமல் இருந்துள்ளான். இதனால், ஆசிரியை அந்த  மாணவனை கண்டித்துள்ளார்.  ஆத்திரமடைந்த அவன் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும்,  பேஸ்புக்கில் தன்னை கண்டித்த ஆசிரியியை மிரட்டியுள்ளான். ஆசிரியயையும் அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதாக பேசியுள்ளான். ஆசிரியையின் மகளும் ஆதே வகுப்பைச் சேர்ந்தவள் தான்.

மாணவனின் இத்தகைய மிரட்டலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த, ஆசிரியை பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசாரிடன் புகார் அளித்துள்ளார்.  ஆசிரியை அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் 7 வகுப்பு மாணவனை இடைநீக்கம் செய்தது. மேலும், அந்த மாணவனின் குடும்பத்தை அழைத்து அவனை குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளது. குருகிராம் பள்ளி மாணவன், ஃபேஸ்புக் மூலம் ஆசிரியியை மிரட்டிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Class 7 student of gurugram school threatens to rape teacher and her daughter in facebook post

Next Story
வைரல் நாயகி பிரியா பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை!priya prakash warrier
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express