சட்டப் படிப்பு படிப்பதற்கு நுழைவுத் தேர்வான கிளாட் (CLAT) தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியாகிறது.
கிளாட் சட்டப்படிப்புக்கான நுழைவு தேர்வு எழுத தகுதி பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 2008 ஆம் ஆண்டு முதல் கிளாட் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அதன் மூலம் 40 ஆயிரம் முதல் 1லட்சம் வரை மாணவர்கள் சட்டப்படிப்புக்கான நுழைவு தேர்வு எழுதி வருகின்றனர். பிளஸ்-2 படித்துவிட்டு சட்டம் (எல்.எல்.பி.) படிக்க விரும்புபவர்கள், எல்.எல்.எம். எனப்படும் சட்ட முதுநிலை படிப்பு படிக்க விரும்புபவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்
நாடு முழுவதும் உள்ள 18 சட்டப் பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வின் மூலம் சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது.2018-ம் ஆண்டுக்கான ‘கிளாட்’ தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பரிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஜனவரி 1 முதல், மார்ச் 31-ந் தேதிவரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு வரும் மே மாதம் 13 ஆம் தெதி வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுவதுவற்கான ஹால் டிக்கெட்டை இன்று(204.18) மாணவர்கள் கிளாட் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று http://www.clat.ac.in/ பதிவிறக்கம் (Download) செய்துக் கொள்ளலாம். வரும் மே 12 ஆம் தேதி வரை மட்டுமே இந்த ஹால் டிக்கெட்டுகளை மாணவர்களால் பெற முடியும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத்தேர்வு, ஆங்கில அறிவு, பொது அறிவு மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள், கணிதம், சட்ட அறிவு (Legal Aptitude), பகுத்தாராயும் திறன் (Logical Reasoning) ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இளங்கலை சட்டப் படிப்பில் சேரப் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிளாட் தேர்வுக்கான கேள்வித்தாள் 200 கேள்விகள் கொண்டது. முதுகலை படிப்பிற்கு 150 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதே போல், ஒவ்வொரு தவறான விடைக்கும் மைனஸ் மதிப்பெண்களும் உண்டு.
பொது அறிவு, லீகல் ஆப்டிடியூட் பிரிவுகளில் தலா 50 கேள்விகளும், ஆப்டிடியூட் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் பிரிவுகளில் தலா 40 கேள்விகளும், இதர பகுதிகளில் இருந்து 20 கேள்விகளும் இடம் பெறும்.
கிளாட் தேர்விற்கான ஹால் டிகெட் பெறும் முறை:
1. முதலில் http://www.clat.ac.in/ அதிகாரப் பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
2. பின்பு, அதன் இடது பக்கத்தில் (admit card) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. உங்கள் விபரம் குறித்த தரவுகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
4. பின்பு, அதில் தோன்று ஹால் டிக்கெட் விண்ணப்பத்தை பதிவிறக்கம் (Download) செய்ய வேண்டும்.