Advertisment

காதலிக்கு பதிலாக தேர்வு எழுத முயற்சி... பெண் வேடமிட்டு வந்த காதலன் மீது வழக்கு

அங்ரேஸ் சிங் என்ற இளைஞர், பரம்ஜீத் கவுர் என்ற தனது காதலியின் பெயரில் போலி ஆதார், வாக்காளர் மற்றும் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுத முயற்சி செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Angrej Singh

அங்ரேஜ் சிங் ஃபாசில்காவில் உள்ள சஹாரன் நகரில் வசிப்பவர் பரம்ஜீத் கவுர்

பஞ்சாப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆள்சேர்ப்பு தேர்வில், தனது காதலிக்கு பதிலாக ஆளமாறாட்டம் செய்து தேர்வு எழுத முயற்சி செய்த வாலிபர் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள பாபா ஃபரித் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆட்சேர்ப்புத் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு எழுத வந்த அனைவருக்கும் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றபோது, ஒருவரின் விபரங்கள் பொருந்தாமல் இருந்துள்ளது, இதை கண்டறிந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனது காதலியைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் படிக்க : Clean shaven and face made up, Punjab man tries to take exam in place of girlfriend

இது தொடர்பாக காவல்துறையின் கோட்காபுரா எஸ்ஹோ மனோஜ் குமார் என்பவர் கூற்றுப்படி, ஃபசில்காவைச் சேர்ந்த ஆங்ரேஸ் சிங், திருட்டு மற்றும் தொப்பியுடன் சல்வார் கமீஸ் அணிந்து தேர்வு அறைக்கு வந்தார். அவர் தனது முகத்தில் க்ளீன் ஷேவ் செய்து, பெண் போல் மேக்கப் போட்டு, தனது காதலி பரம்ஜீத் கவுரின் புகைப்படத்திற்கு மேல் தனது சொந்த புகைப்படத்தை (பெண் போல் உடையணிந்துள்ளார்) ஒட்டியிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

பெண் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்ற மையங்களில் ஒன்றான கோட்காபுராவில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் ஜனவரி 7ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆள்மாறாட்டம் செய்த நபர் தேர்வு அறையில் நுழைந்தபோதும், விண்ணப்பப் படிவத்தில் உள்ள பரம்ஜீத் கவுரின் படம், தேர்வுக்கு வந்தவர் முகத்துடன் பொருந்தாததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் பயோமெட்ரிக்ஸ் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது பெயர் மற்றும் விபரங்கள் பதிவுகளில் வைக்கப்பட்டுள்ள விபரங்களுடன் பொருந்தவில்லை. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவரது பெயா ஆங்ரேஸ் சிங் என்றும், தனது காதலிக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில், பரம்ஜீத் கவுர் என்ற பெயரில் போலி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் ஐடி கார்டு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்என்று ஃபரித்கோட் எஸ்.எஸ்.பி ஹர்ஜீத் சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

26 வயதான அங்ரேஸ் சிங், ஃபசில்காவில் உள்ள சஹாரன் நகரில் வசித்து வருகிறார். அதே மாவட்டத்தில் உள்ள தானி முன்ஷி ராம் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான பரம்ஜீத் கவுர். ஏற்கனவே இந்த தேர்வில் பரம்ஜீத் கவுர் தோல்வியடைந்த நிலையில, அவரது உறவினர் அங்ரேஸ் சிங் என்று கூறியிருந்தாலும், விசாரணையில் அவர்கள் உறவினர்கள் அல்ல என்று தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறையின் மனோஜ் குமார் என்பவர் கூறுகையில், "ஜனவரி 7 அன்று நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் கிடைக்காததால் அவரை வீட்டிற்கு அனுப்பினோம், ஆனால் ஜனவரி 8 ஆம் தேதி, பிஎஃப்.யு.எச்.எஸ் (BFUHS) இன் பதிவாளர் டாக்டர் தீபக் பாட்டியிடம் இருந்து எங்களுக்கு புகார் கிடைத்தது, இதனால் ஆங்ரேஸுக்கு எதிராக IPC பிரிவு 419 (ஆள்மாறாட்டம்) கீழ் FIR பதிவு செய்தோம். இந்த வழக்கில் பரம்ஜீத் கவுரையும் இணை குற்றவாளியாக சேர்ப்போம், ஏனெனில் அவரது அனுமதியின்றி இவர் தேர்வு எழுத வந்திருக்க முடியாதுஎன்று கூறியுள்ளார்.

இதனிடையே அங்ரேஸ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றுள்ளார் என்று கூறிய எஸ்எச்ஓ "பல்கலைக்கழகத்திடம் இருந்து கூடுதல் விவரங்களைப் பெற்ற பிறகு போலி அடையாள அட்டைகள் குறித்து விசாரணை நடத்தப்படும்" கூறியுள்ளார். பரம்ஜீத் கவுரின் தேர்வு பேப்பர் ரத்து செய்யப்பட்டதாக துணைவேந்தர் டாக்டர் ராஜீவ் சூட் தெரிவித்துள்ளார். ஒரு நபர் எப்படி போலி ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை தயாரித்தார் என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும்.

கடந்த மாதம் நடந்த நர்சிங் தேர்வில், ஒரு தேர்வரின் பயோமெட்ரிக்ஸ் பொருந்தவில்லை என்பதால், அந்த தேர்வாளரை திருப்பி அனுப்பிவிட்டோம். இப்போது தேர்வில் அமர்வதற்கு முன் முகம் அடையாளம் மற்றும் பயோமெட்ரிக்ஸ் அவசியம் என்று ஒரு புதிய வழியை நாங்கள் வகுத்துள்ளோம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பயோமெட்ரிக்ஸ் மற்றும் முகம் அடையாளம் காணத் தவறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு ஆண் தனது காதலிக்காக மட்டுமே இதுபோன்ற அபாயத்தை எடுக்க முடியும்" என்று ஒரு போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.ஃபரித்கோட் மற்றும் ஃபெரோஸ்பூரில் உள்ள 26 மையங்களில் நடந்த தேர்வில் 7,500 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment