G20 Industrial Park in Puducherry: புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன்(IIT- Madras) காணொலி காட்சி வாயிலாக இன்று (27.09.20232) முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ந. ரங்கசாமி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமிநாராயணன் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி 10X New Initiatives தலைவர் ராஜேந்திர மூத்தா, பேராசிரியர் ஆர்.ஜி. ராபின்சன், Dean Admn., எஸ். பார்த்தசாரசி, OSD-Director Office மற்றும் சரவணன் சுந்தரமூர்த்தி, IT Advisor ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், சென்னை, இந்திய தொழில்நுட்ப கழகத்தின் செயல்பாடுகள், அங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கேட்டறிந்தனர்.
மேலும், புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைப்பதற்கு தேவைப்படும் நிலம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அடுத்த மாதம் முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. வாளாகத்தை ஆய்வு செய்ய நேரில் விஜயம் செய்யும் என்றும், புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“