scorecardresearch

ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் நாராயணசாமி – கிரண்பேடி பேச்சு வார்த்தை

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன், எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்

ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் நாராயணசாமி – கிரண்பேடி பேச்சு வார்த்தை

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் துணை ஆளுநர் கிரண் பேடிக்கும் ஆரம்பத்திலிருந்தே மனக்கசப்புகள் இருந்து வந்தன.

இம்முறை அது சற்று அதிகமாகியிருக்கிறது. மாநில ஆட்சி அதிகாரத்தில் கிரண்பேடி தலையிடுவதாகக் கூறி முதல்வர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், என்னுடன் விவாதிக்க தயாரா என நாராயணசாமிக்கு சவால் விடுத்திருந்தார் துணை ஆளுநர் கிரண்பேடி. தற்போது அவர் இந்த சாவாலை ஏற்றிருக்கிறார். ’புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன், எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்’ என அறிவித்திருக்கிறார் நாராயணசாமி.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். இதனை முதல்வர் நாராயணசாமியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆக, புதுச்சேரி அரசியலில் அடுத்த சுவாரஸ்யம் என்னவோ என அண்டை மாநிலத்தவரும் இப்போது ஆர்வத்தில் உள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Cm narayanasamy agreed debate kiran bedi