Advertisment

புதுச்சேரியில் பா.ஜனதா போட்டி; முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Puducherry CM Rangasamy Happy tears, Puducherry CM Rangasamy Happy tears in Medical students convocation, மருத்துவக் கல்லூரி தொடங்கியர் கையால் பட்டமளிப்பு விழா, ஆனந்த கண்ணீர் விட்ட ரங்கசாமி, Medical students convocation, Puducherry CM Rangasamy, Puducherry Govt Medical college students convocation event

புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Puducherry | N Rangasamy | Bjp | மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர். 
இதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று  வெளியிடப்பட்டது.

Advertisment

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார். 
இந்த நிலையில், புதுச்சேரி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதலமைச்சருமான ரங்கசாமி இன்று (மார்ச் 03,2024) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தேர்தல் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வருவார் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி  தெரிவித்துள்ளார்.

செய்தியார் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bjp Puducherry N Rangasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment