கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9 அன்று ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
இந்நிலையில், ஒரு மாத காலம் ஆகும் நிலையில், பிரச்சினையை திசை திருப்ப முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிப்பதாக கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த மாதம் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் தனது மகள் இறந்தது தொடர்பான விசாரணையில் மேற்கு வங்க அரசு மற்றும் மருத்துவமனை அதிகாரிகளை கடுமையாக சாடிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, மாநில அரசு இந்த வழக்கில் உண்மையை மறைக்க முயற்சிப்பதாக கூறினார்.
எனது மகள் இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், அந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தொடர்பான விடை தெரியாத கேள்விகளால் கவலையடைந்துள்ளதாக தந்தை கூறுகிறார். பாதிக்கப்பட்ட தந்தை கூறுகையில், "என்னால் தூங்க முடியவில்லை, பல கேள்விகள் எங்களைத் தொந்தரவு செய்கின்றன. அரசாங்கமே இந்த சம்பவத்தை குறைத்து மறைக்க முயல்கிறது என்றால் என்ன பதில் உள்ளது. இதன் பின்னால் ஏதோ சதி உள்ளது என்று நான் ஏன் உணரக்கூடாது? ” என்றார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், யாருடைய அறிவுறுத்தலின் பேரில் எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்று முதலில் கூறப்பட்டது. “அவள் இறந்திருந்த நிலை குற்றத்தின் தன்மையை விவரித்தது. நிபுணர்களான மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினரால் சூழப்பட்டதை கற்பனை செய்து பாருங்கள். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக எங்களிடம் கூறினார்கள்.
“என் மகள் பணியில் இருந்தாள், அவள் நீண்ட நேரமாக காணவில்லை என்றால், அவளைத் ஏன் யாரும் தேடவில்லை. அவர் இறந்ததை காலையில் தான் கண்டுபிடித்தார்க்ள். மருத்துவமனையில் என்ன மாதிரியான அமைப்பு உள்ளது…?, ”என்று அவர் கூறினார்.
மேலும் கூறிய அவர், அரசாங்கம் துர்கா பூஜை விழாக்களில் கவனம் செலுத்த முயற்சிப்பதாகவும், பண்டிகை மூலம் அரசாங்கம் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
“முதல்வர் இப்போது அனைவரையும் பண்டிகைகளுக்குத் திரும்புமாறு வலியுறுத்தி வழக்கிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார். இது விசாரணையை திசை திருப்பும் திட்டமிட்ட தந்திரம்” என்று தந்தை கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நடந்து வரும் சிபிஐ விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“