கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி! சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா…

yediyurappa : கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு, பாஜக சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு, பாஜக சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு அளித்ததால் பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக சார்பில் எடியூரப்பா கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா ஜூலை 31 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கினார்.
இதனிடையே, நேற்று, கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், குமாரசாமி அரசுக்கு அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற எம்.எல்.ஏ-க்கள் 14 பேர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார். அதற்கும் முன்னதாக 3 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்திருந்தார். இதன் மூலம், கர்நாடகா சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 ஆனது. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 உறுப்பினர்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையில், சபாநாயகர் ரமேஷ் குமார் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். அதன்பின், முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியின் குமாரசாமி அரசு கொண்டுவந்த நிதி மசோதாவை முதலமைச்சர் எடியூரப்பா தாக்கல் செய்தார். அந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டியிடம் கடிதம் அளித்தார். பின்னர், அவர் குறிப்பிடுகையில், சபாநாயகராக 14 மாத காலம் பணியாற்றிய தான் தனது மனசாட்சிப்படியும், அரசியலமைப்பின்படியும் பணியாற்றியதாகவும் தான் பதவியின் கௌரவத்தை தனது திறனுக்கு ஏற்றவாறு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் ரமேஷ் எல்.ஜர்கிஹோலி, மகேஷ் குமுதஹள்ளி சபாநாயகர் பிறப்பித்த தகுதிநீக்க உத்தரவை பரிசீலிக்க வேண்டும் என்றும் தங்களுடைய ராஜினாமா மற்றும் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm yediyurappa wins trust vote

Next Story
கர்நாடகாவில் 14 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் – சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி அறிவிப்புKarnataka, mla, disqualification, trust vote, yediyurappa, கர்நாடகா எம்எல்ஏ, நம்பிக்கை வாக்கெடுப்பு, எடியூரப்பா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com