டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (சனிக்கிழமை) நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவது குறித்து பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், கல்வி, மனித வள மேம்பாடு, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற முன்னுரிமைப் துறைகளில் கவனம் செலுத்தி பேசி, மாநிலத்திற்கான வளர்ச்சி வரைபடத்தை வழங்கினார்.
மாநில வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கை வலியுறுத்திய அவர், கல்வியை தொழிற்திறன்களுடன் இணைப்பதும், மாணவர்களை வேலைவாய்ப்பிற்கு தயார்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி அளிப்பது முக்கிய நோக்கமாக இருக்கும் என்று கூறினார்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநிலத்தை பாதிக்கும் குடிநீர் பிரச்சனையில் கவனம் செலுத்தினார், மேலும் உத்தரகாண்டில் ஒரு நீரூற்று மற்றும் நதி மறுசீரமைப்பு ஆணையத்தை அமைக்க சிறப்பு நிதி உதவி வழங்கிட மத்திய அரசிடம் கேட்டார் - இது நீர் பாதுகாப்பு, நீர் ஆதாரங்களை புதுப்பித்தல் மற்றும் இணைப்பதில் கவனம் செலுத்தும் அமைப்பாகும் என்றார்
மேலும், கிராமப்புறங்களில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார், மாநிலத்தில் 2 கிராமப்புற மையங்கள் மற்றும் 110 வளர்ச்சி மையங்களை முன்னோடித் திட்டங்களாகத் தொடங்கியுள்ளதாக கூறினார். திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை அவர் கோரினார்.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, ஒடிசாவின் 480 கி.மீ நீளமுள்ள கடற்கரைப் பகுதியைப் பயன்படுத்தி, மாநிலத்தில் அதிக துறைமுகங்களை உருவாக்கவும், தாம்ரா மற்றும் கோபால்பூர் துறைமுகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான தொழில்துறை மண்டலங்களை அமைப்பதற்கும், அஸ்தரங்க, பலூர், பஹுடா மற்றும் சுபர்ணரேகா ஆகிய இடங்களில் பசுமைக் களஞ்சியங்களை உருவாக்குவதற்கும் மத்திய அரசின் ஆதரவைக் கோரினார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ‘விக்சித் பாரத்@ 2047’ திட்டத்தில் மாநிலத்தின் சாலை சீரமைப்பை பட்டியலிட்டு பேசினார். இதற்காக மாற்றத்திற்கான குஜராத் மாநில நிறுவனம் (GRIT) என்ற சிந்தனைக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Water crisis, law and order, tourism — what CMs said at NITI Aayog meeting
கூட்டத்தில் பேசிய படேல், "நன்றாக சம்பாதிப்பது மற்றும் நன்றாக வாழ்வது" என்ற இரண்டு "தூண்களில்" சாலை வரைபடம் உருவாக்கப்படும், "மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார செழிப்பைக் கொண்டுவரவும்" நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மாநில சுற்றுலாத் துறை மேம்பாடு குறித்துப் பேசினார். மாநிலம் பல்வேறு நிகழ்ச்சிகள், சர்வதேச விழாக்களுக்கு முக்கிய தளமாக மாறியுள்ளதாக கூறினார். கார்னிவல் ஆஃப் கோவா, சன்பர்ன் ஃபெஸ்டிவல், ஷிக்மோத்சவ், இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா (IFFI) மற்றும் சர்வதேச ப்ர்பிள் திருவிழா போன்ற சர்வதேச விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு கோவா ஒரு சுற்றுலா மையமாக மாறியுள்ளது என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார். மிகவும் விரும்பப்படும் சர்வதேச சுற்றுலா தலமாகும் என்றார்.
உத்தர பிரதேசத்தின் நல்லாட்சிக்கு "சட்டத்தின் ஆட்சி" ஒரு முன்நிபந்தனை என்று யோகி வலியுறுத்தினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது மாநிலம் குற்றங்களை பொறுத்துக்கொள்ளாத கொள்கையை பின்பற்றுகிறது என்றார். இது, வணிகம் செய்வதற்கான எளிமையானதாகவும் மற்றும் முதலீட்டுக்கு உகந்த கொள்கைகளுடன் சேர்ந்து, மாநிலம் முதலீட்டிற்கான "கனவு இடமாக" மாற வழிவகுத்ததாக கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“