கோவாவில் உள்ள மொர்முகோ துறைமுகத்தில் இருந்து மூன்று மிகப்பெரிய நிறுவனங்கள், மிக அதிகளவிலான நிலக்கரிகளை எடுத்து, பெங்களூருவுக்கு கொண்டுச் செல்வதால் சுற்றுச் சூழல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
2016-17 ஆண்டில் 12.75 மில்லியன் டன் நிலக்கரிகள் எடுக்கப்பட்டு கோவாவில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஜிண்டால், அதானி குழுமம் மற்றும் வெடன்டா ஆகிய இந்த மூன்று நிறுவனங்கள் தான் இங்கு நிலக்கரியை எடுத்து வருகின்றன. தங்களுடைய இரும்பு தொழிற்சாலைகளுக்கு அந்த நிலக்கரிகளை அவை பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமில்லாமல், கூடுதலாக 1.2 மில்லியன் டன் ஆன்த்ரசைட்களையும், 2.6 மில்லியன் டன்கள் கோக்கிங் கோல் மற்றும் 2.1 மில்லியன் டன் தெர்மல் கோல்களையும் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரியில் உள்ள எஃகு ஆலைக்கு பயன்படுத்துகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z628-300x217.jpg)
இந்தியன் எக்ஸ்பிரஸின் நான்கு மாத கால கள ஆய்வில், துறைமுகத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரிகள் மூன்று வழிகளில் கொண்டுச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. சாலை, ரயில் மற்றும் ஆறுகள் வழியாக இது கொண்டுச் செல்லப்படுகிறது. இதனால், கோவாவின் சுற்றுச் சூழல் இதயம் ஆழமாக வெட்டப்பட்டு காயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதை நாம் உணர முடிகிறது.
அதிகளவிலான நிலக்கரிகள் சாலை மற்றும் ரயில் வழியாக கொண்டுச் செல்லப்படுவதால், கிராமங்கள் மற்றும் நகரங்களின் வாழ்வியலுக்கு இது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z630-300x217.jpg)
இந்த நிலக்கரிகளால் நுரையீரல் மாசடைகிறது. சுவாசக் கோளாறுகள் தூண்டப்படுகிறது. நெல் வயல்கள், காடுகள், எண்ணற்ற ஆறுகள், சரணாலயங்கள், மலைகள் என அனைத்தும் இதனால் மாசடைகின்றன.
அதிகாரப்பூர்வமாக, மொர்முகோ துறைமுகத்தில் இருந்து தினமும் 34,200 டன் நிலக்கரிகள் ரயில் மூலம் கொண்டுச் செல்லப்படுகின்றன. வாஸ்கோ, மார்கோ மற்றும் குலேம் வழியாக செல்லும் இந்த ரயில் கர்நாடகாவின் ஹூப்ளியை அடைகிறது.
இறுதியாக நமக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஜிண்டால் மற்றும் அதானி நிறுவனங்கள், 2017 ஏப்ரல் - ஜூலை மாத இடைவெளியில், 3 மில்லியன் டன் நிலக்கரிகளை, சாலை மற்றும் ரயில் மார்க்கமாக கர்நாடகாவிற்கு கொண்டுச் சென்றுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z629-300x217.jpg)
இதுபோன்று அதிகளவிலான நிலக்கரிகள் கொண்டுச் செல்வது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், "டன் கணக்கிலான நிலக்கரிகள் கொண்டுச் செல்லும் போது, அந்த தூசிகள் வீட்டிற்குள் படிகின்றன. இதனால், இங்கு காற்று மாசுபடுகிறது. அதுவே, 50,000 மில்லியன் டன் நிலக்கரிகளை கொண்டுச் சென்றால் என்ன ஆவது? என நினைத்துப் பாருங்கள். நாம் பேரழிவை எதிர்நோக்கியுள்ளோம்" என்றார்.
ஆனால், இதுகுறித்து நாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேள்விகளை முன்வைத்த போது, "சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தான் நாங்கள் செயல்படுகிறோம். அதேபோல், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் செயல்படுகிறோம்" என்றனர்.