Advertisment

புதுச்சேரியில் சுற்றுலாப் படகுகளை இயக்கத் தடை; கடலோரக் காவல் பிரிவு அறிவிப்பு

புதுச்சேரியில் சுற்றுலாப் படகுகளை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல் பிரிவு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coast Guard Division Notification, Ban on plying of tourist boats in Puducherry, புதுச்சேரியில் சுற்றுலாப் படகுகளை இயக்கத் தடை, கடலோரக் காவல் பிரிவு அறிவிப்பு, Coast Guard Division Notification, Ban on plying of tourist boats in Puducherry

credit photo: pondicherrytourism.co.in

புதுச்சேரியில் சுற்றுலாப் படகுகளை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல் பிரிவு அறிவித்துள்ளது.

Advertisment

புதுச்சேரி துறைமுக வளாகத்தில் உள்ள கடலோரக் காவல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படும் படகுகளில், போதிய பாதுகாப்பு மற்றும் அதற்கான உரிமம், உறுதித் தன்மை சான்றிதழ் பெறாமல் படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.

எனவே, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் கடலோரக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, யாரும் சுற்றுலாப் படகுகளை இயக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடா்பாக, மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, படகுகளை இயக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment