இந்திய ஊடகங்களை அம்பலப்படுத்தியது கோப்ரா போஸ்ட்... ஆப்பரேஷன் 136 - ல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.

“பணத்திற்காக மோடிக்கும் இந்துத்துவத்திற்கும் ஆதரவாகச் செயல்பட்டது இந்திய ஊடகங்கள்” - கோப்ரா போஸ்ட் புதிய புலனாய்வு செயல்பாட்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல ஊடங்கங்கள் பணத்திற்காக மோடிக்கு மற்றும் இந்துத்துவத்திற்கு ஆதரவாகவும் செய்திகள் வெளியிட்டதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோப்ரா போஸ்ட் என்னும் ஊடகம் புதிய புலனாய்வில் ஈடுபட்டது. இதற்கு “ ஆபரேஷன் 136” என்று பெயர் சூட்டப்பட்டது. மக்களுக்குத் தவறான செய்திகளை வெளிக்கொண்டு வரும் இந்திய ஊடகங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் விளைவாக கோப்ரா போஸ்ட் நிறுவனம் தான் சேகரித்த அனைத்து விவரங்களையும் செய்தியாக வெளியிட்டது.

இதில் வட இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள், பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு ஆதரவாகவும் இந்துத்துவத்தை ஆதரிக்கும் வகையிலும் செய்திகளை வெளியிட்டதாகக் கூறியுள்ளது. இதற்குச் சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ள ஊடகங்களின் ஊழியர்களைச் சந்தித்து ஸ்டிங்க் ஆபரேஷன் (sting operation) நடத்தியது. இந்த ரகசிய காட்சிப்பதிவில், எவ்வாறு தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று ஊடகவியாளர்களே விளக்கியுள்ளனர். இத்தகைய நடத்தை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் பல்வேறு இந்திய ஊடகங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. தைநிக் ஜாக்ரன்(Dainik Jagran), டி.என்.ஏ ( DNA), ஸீ செய்திகள் (Zee), ஆஜ் (Aaj ) மற்றும் பல ஊடகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பிரபல செய்தி சேனல் இந்தியா டீவி ( India TV) பெயரும் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் இதற்கு அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு செய்தி பரப்பிய ஊடங்கங்களை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close