Advertisment

இந்திய விமானப்படையின் குடியரசு தின சாகசங்கள் - கழுகுப் பார்வை காட்சிகள்

விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் படம்பிடிக்கப்படும் காட்சிகள், டிடியில் நேரலையில் ஒளிப்பரப்பாக செய்யும் வகையில் ஐஏஎஃப் ஏற்பாடு செய்திருந்தது. விமானி பார்வை மற்றும் காக்பிட் காட்சிகளை முதன்முறையாக பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

author-image
WebDesk
New Update
இந்திய விமானப்படையின் குடியரசு தின சாகசங்கள் - கழுகுப் பார்வை காட்சிகள்

நாட்டின் 73வது குடியரசு தின விழா, டெல்லி ராஜபாட்டையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமாக, இந்திய விமானப்படை (IAF) 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 போர் விமானங்களை விண்ணில் பறக்கசெய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisment

இதுதவிர, விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் படம்பிடிக்கப்படும் காட்சிகள், டிடியில் நேரலையில் ஒளிப்பரப்பாக செய்யும் வகையில் ஐஏஎஃப் ஏற்பாடு செய்திருந்தது. விமானி மற்றும் காக்பிட் காட்சிகளை முதன்முறையாக பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

ஐஏஎஃப் வெவ்வேறு ஃபார்மேஷன்களில் தனது சாகச விழாவை வானில் நடத்தினர். Baaz ஃபார்மேஷனில் ஒரு ரஃபேல் ஜெட், இரண்டு ஜாகுவார், இரண்டு MiG-29 UPG மற்றும் இரண்டு Su-30 MI ஒன்றிணைந்து, ஏழு விமானங்களின் 'Arrowhead' உருவாக்கத்தை உருவாக்கியது.

Amrit ஃபார்மேஷனில் 17 ஜாகுவார் விமானங்கள் 75 என்ற எண்ணை பிரதிபலிக்கும் வகையில் பறந்தனர். இந்திய ராணுவமானது, இரண்டு துருவ் ரக ஹெலிகாப்டர்கள், இரண்டு ருத்ரா ஹெலிகாப்டர்கள் அடங்கிய அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்களின் (ALH) அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த ருத்ரா ஃபார்மேஷன் 301 ராணுவ விமான சிறப்பு நடவடிக்கைப் படையின் கர்னல் சுதிப்தோ சாக்கி தலைமையில் நடந்தது. தொடர்ந்து,தொடர்ந்து லெப்டினன்ட் கர்னல் அனில் மேத்தா, சேனா மேடல், லெப்டினன்ட் கர்னல் விவேக் எஸ்வி ஆகியோர் இரண்டு ருத்ராக்களிலும், லெப்டினன்ட் கர்னல் விஜய் கோயத் துருவ் ஹெலிகாப்டரில் இருந்தனர்.

அணிவகுப்பின் தொடக்கத்தில், 155 ஹெலிகாப்டர் யூனிட்டின் நான்கு Mi-17 V5 ஹெலிகாப்டர்கள், ஒயின் கிளாஸ் அமைப்பில் பறந்து, ராஜபாட்டையில் மலர்களை தூவியது.

publive-image

அணிவகுப்பின் முடிவில், 'நேத்ரா', 'வினாஷ்', 'திரங்கா', 'திரிசூல்' மற்றும் 'வருணா' போன்ற பல ஃபார்மேஷன்களையும் ரஃபேல், சுகோய், ஜாகுவார், எம்ஐ-17, சாரங், அப்பாச்சி மற்றும் டகோட்டா போன்ற விமானங்கள் நிகழ்த்தி அசத்தியது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iaf Republic Day 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment