முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்

National Girl Child Day : தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

National Girl Child Day : இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண் குழந்தைகளை போற்றும் வகையில் பல வகையான திட்டங்கள் ஒவ்வொரு மாநிலஅரசும் செயல்படுத்தி வருகிறது. மேலும்“தேசிய பெண் குழந்தைள் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு அனைத்து நாட்டின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கும், அவர்களின் பிரகாசமான எதிர்காலம் குறித்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை போற்றும் வகையில், உத்திரகண்ட் மாநிலத்தில் கிருஷ்டி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி ஒருநாள் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரைச் சேர்ந்த அவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி படித்து வருவதாக கூறப்படுகிறது. இன்று ஒருநாள் முதல்வராக பதவியேற்ற கல்லூரி மாணவி,  மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் மூலம் அனைத்து மகள்களையும் தன்னம்பிக்கை மற்றும் அவர்களின் அதிகாரம் பெற எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று உத்திரகண்ட் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நாளை முன்னிட்டு”பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு துறைகளில் இந்தியாவின் மகள்கள் செய்த சாதனைகளைப் பாராட்டினார். பெண் குழந்தைகளை கல்வி, சிறந்த சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாலின உணர்திறனை மேம்படுத்துதல் போன்றவற்றில், கவனம் செலுத்தும் பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

மேலும் பெண் குழந்தையை மேம்படுத்துவதற்கும், அவர் கண்ணியமும் வாய்ப்பும் நிறைந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கும், அவற்றை  உறுதி செய்வதற்கும் உழைக்கும் அனைவரையும் சிறப்பாகப் பாராட்டும் ஒரு நாள் இது” என்று பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது ஒருநாள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்டி கோஸ்வாமி ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து 2019ல் தாய்லாந்து சென்று சர்வதேச பெண் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: College girl srishti goswami oneday cm in uttarakhand

Next Story
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!Farmers can enter delhi for r day tractor rally stay near borders Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com